Theme Check

மண் சரிவில் சிக்கி 130 பேர் உயிரிழப்பு… சிதைந்து போன பிரேசில்!!

மண் சரிவில் சிக்கி 130 பேர் உயிரிழப்பு… சிதைந்து போன பிரேசில்!!

மண் சரிவில் சிக்கி 130 பேர் உயிரிழப்பு… சிதைந்து போன பிரேசில்!!
X

பிரேசில் நாட்டில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுகளில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 130 ஆக உயர்ந்துள்ளது.

ரியோ டி ஜெனிரோ மாகாணத்தில் 30 நாட்கள் பெய்ய வேண்டிய மழை வெறும் 3 மணி நேரத்தில் பெய்ததாக அதிகாரிகள் கூறுகின்றனர். இப்படி ஒரே நாளில் கொட்டித்தீர்த்த கனமழையால் நீர்நிலைகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

வெள்ள நீரானது, ஊருக்குள் புகுந்ததில், மண்சரிவுகள் ஏற்பட்டு பல வீடுகள் மூழ்கி போயின. தொடர் கனமழையால் அங்குள்ள பல்வேறு நகரங்களில் வெள்ளம் கரை புரண்டோடுகிறது. இதில் ஆயிரக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின.

brazil

சாலைகளில் வெள்ளம் ஆறாக பெருக்கெடுத்து ஓடுவதால் போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது. மேலும் சாலைகளில் நிறுத்தப்பட்டிருந்த ஏராளமான வாகனங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன.

கன மழை மற்றும் வெள்ளம் காரணமாக பெட்ரோபோலிஸ் பிராந்தியத்தின் பல இடங்களில் பயங்கரமான நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இதில் ஏராளமான வீடுகள் மண்ணோடு மண்ணாக புதைந்தன.

brazil

வெள்ளம், நிலச்சரிவு பாதித்த பகுதிகளில் நூற்றுக்கணக்கான ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டன. நிலச்சரிவில் இருந்து 24 பேரை காப்பாற்றி உள்ளதாகவும், 439க்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

வெள்ளம் மற்றும் மண்சரிவுகளில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 130 ஆக உயர்ந்து உள்ளது. 200க்கும் மேற்பட்டோரை காணவில்லை. அவர்களை தேடும் பணி தொடர்ந்து வருகிறது.

newstm.in

Next Story
Share it