வாகன ஓட்டிகளை மகிழ்ச்சியில் வைத்த 137 நாட்கள்.. எண்ணெய் நிறுவனங்களுக்கு இத்தனை கோடி இழப்பா..?
வாகன ஓட்டிகளை மகிழ்ச்சியில் வைத்த 137 நாட்கள்.. எண்ணெய் நிறுவனங்களுக்கு இத்தனை கோடி இழப்பா..?

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 4-ம் தேதி முதல், பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லாமல் ஒரே விலையில் நீடித்தது.
குறிப்பாக, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 101 ரூபாய் 16 காசுகளுக்கும், டீசல் 92 ரூபாய் 19 காசுகளுக்கும் விற்கப்பட்டது.
இதுபோல், நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி விற்பனை செய்யப்பட்டு வந்தது.
இந்நிலையில், 5 மாநில சட்டமன்றத் தேர்தல் உள்பட முக்கிய நிகழ்வுகள் நடைபெற்ற நிலையில், 137 நாட்களுக்கு பின்னர் கடந்த 21-ம் தேதி பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தின.
இந்த நிலையில், 137 நாட்களாக பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தாததால் எண்ணெய் நிறுவனங்கள் பல ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் இழப்பை சந்தித்துள்ளது.
இது தொடர்பாக, மூடிஸ் முதலீடு சேவை என்ற நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில், ‘இந்தியாவில் 137 நாட்களாக பெட்ரோல், டீசல் விலையை ஒரே விலையில் வைத்திருந்ததால் இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய 3 மிகப்பெரிய எண்ணெய் நிறுவனங்கள் மொத்தம் 19 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் இழப்பை சந்தித்துள்ளது’ என தெரிவித்துள்ளது.

