Theme Check

13 ஆண்டுகளில் இல்லாத அளவில் ஒரே நாளில் 139 மி.மீ. மழை பதிவு.. இன்றும் மஞ்சள் அலர்ட் !

13 ஆண்டுகளில் இல்லாத அளவில் ஒரே நாளில் 139 மி.மீ. மழை பதிவு.. இன்றும் மஞ்சள் அலர்ட் !

13 ஆண்டுகளில் இல்லாத அளவில் ஒரே நாளில் 139 மி.மீ. மழை பதிவு.. இன்றும் மஞ்சள் அலர்ட் !
X

டெல்லியில் கடந்த 13 ஆண்டுகளில் இல்லாத வகையில் ஆகஸ்ட் மாதத்தில் ஒரே நாளில் அதிகபட்சமாக 139 மி.மீ. மழை பதிவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

டெல்லியில் கொரோனா கட்டுக்குள் வந்த நிலையில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி வருகிறது. இதனால் பல்வேறு முக்கிய சாலைகளில் தண்ணீர் சூழ்ந்து போக்குவரத்து முடங்கியது. இந்த மழை வரலாற்று பதிவாக மாறியுள்ளது.

rain

இந்திய வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது, டெல்லியில் பல்வேறு இடங்களிலும் பலத்த மழை பெய்துள்ளது. டெல்லிக்கான பிரதிநித்துவத் தரவுகளை வழங்கும் சப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் சனிக்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் 139 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. ரிட்ஜ் வானிலை ஆய்வு மையத்தில் 149.2 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

இது குறைந்தபட்சம் கடந்த 13 ஆண்டுகளில் ஆகஸ்ட் மாதத்தில் ஒரே நாளில் பெய்த அதிகபட்ச மழையாகும். எப்போதும், இல்லாத வகையில் 1961-இல் ஆகஸ்ட் 2-ஆம் தேதி அதிகபட்ச அளவாக 184 மி.மீ. மழை பதிவாகி இருந்தது என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனா்.

rain

காற்றின் தரம் 67 என்ற அளவில் திருப்தி பிரிவில் பதிவாகி இருந்தது. இன்றும் தீவிரமான மோசமான வானிலை இருப்பதற்கான ‘மஞ்சள் நிற’ எச்சரிக்கை வானிலை ஆய்வு மையத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

newstm.in

Tags:
Next Story
Share it