13 வயதுச் சிறுமி 114 முறை கத்தியால் குத்தி மிருகத்தனமாக கொலை ! 14 வயது சிறுவனுக்கு ஏற்பட்ட நிலை !!
13 வயதுச் சிறுமி 114 முறை கத்தியால் குத்தி மிருகத்தனமாக கொலை ! 14 வயது சிறுவனுக்கு ஏற்பட்ட நிலை !!

அமெரிக்காவில் புளோரிடா மாகாணத்தில் மே மாத தொடக்கத்தில் 13 வயது டிரிஸ்டின் பெய்லி என்ற சிறுமி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் 14 வயது சிறுவன் எய்டன் ஃபுசி முதல் நிலை குற்றவாளியாக உள்ளார். முதலில் சிறுவன் கைது செய்யப்பட்டதும் சிறுவர்களுக்கான நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்தது.
ஆனால், எய்டன் புச்சி சிறுவனின் வழக்கு வயது வந்தோர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது என்று மாநில வழக்கறிஞர் அறிவித்துள்ளார். இவர் ஆரம்பத்தில் ஆரம்பத்தில் இரண்டாம் நிலை கொலை குற்றச்சாட்டுக்கு ஆளானார். எனினும் சிறுமி கொலை என்பது மிருகத்தனமானது என்பதை கருத்தில் கொண்டு ஒரு வயது வந்தவர் என்று குற்றம் சாட்ட முடிவு செய்யப்பட்டதாக வழக்கறிஞர் லார்ஸா விளக்கினார்.

சிறுமி பெய்லி மே 9 அன்று செயின்ட் ஜான்ஸ் கவுண்டி ஷெரிப் அலுவலகத்தில் காணாமல் போனதாகக் கூறப்பட்டது. இதையடுத்து தீவிர தேடுதலுக்கு பிறகு மாலை 6 மணிக்கு அவரது உடல் ஒரு குளத்திற்கு அருகிலுள்ள பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வழக்கில் ஃபுசி ஒரு சந்தேக நபராக அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டார் என்று செயின்ட் ஜான்ஸ் கவுண்டி ஷெரிப் அலுவலகம் மே 11 செய்தி வெளியீட்டில் தெரிவித்துள்ளது.
அனால் அதன்பின்னர் விசாரணையில் அவர் இந்த கொலை குறித்து புதிய கொடூரமான விவரங்களை வழங்கினார். மேலும் மருத்துவ பரிசோதகர் அறிக்கையில் கொல்லப்பட்ட சிறுமியின் உடலில் 114 கத்துக்குத்திக் காயங்கள் காணப்பட்டன. அதாவது உடலில் 144 முறை கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.

மிருகத்தனமான தாக்குதலில் ஃபுசி கொண்டு சென்ற கத்தி அருகிலுள்ள குளத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. அந்த கத்தியின் உடைந்த முனை மருத்துவ குழுவினரால் கொல்லப்பட்ட சிறுமியின் தலைப்பகுதியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது. சிறுமி டிரிஸ்டினின் உடலில் ஃபுசியின் டி.என்.ஏவை புலனாய்வாளர்கள் கண்டுபிடித்ததாகவும், அவரது டி.என்.ஏ கத்தி, ஃபுசியின் காலணிகள் மற்றும் அவரது படுக்கையறையில் ஒரு டி-ஷர்ட்டில் காணப்பட்டதாகவும் அவர் கூறினார்.
இந்த நிலையில் கொலைசெய்தது சிறுவனாக இருந்ததாலும் கொலையின் தன்மையை கருதி, அதாவது மிருகத்தனமான இந்த கொலை குறித்து விசாரணை வயது வந்தோர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
newstm.in

