Theme Check

14 அப்பாவி மக்கள் சுட்டுக்கொலை: துணை ராணுவ வீரர்களிடம் விசாரணை !!

14 அப்பாவி மக்கள் சுட்டுக்கொலை: துணை ராணுவ வீரர்களிடம் விசாரணை !!

14 அப்பாவி மக்கள் சுட்டுக்கொலை: துணை ராணுவ வீரர்களிடம் விசாரணை !!
X

நாகலாந்தில் தீவிரவாதிகள் என நினைத்து 14 அப்பாவிகளை சுட்டுக் கொன்றது தொடர்பாக, துணை ராணுவ வீரர்களிடம் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்துவதற்கு ராணுவம் அனுமதி அளித்துள்ளது.

நாகலாந்து மாநிலம் மோன் மாவட்டத்தில் கடந்த 4ஆம் தேதி நடந்த சம்பவம் ஒட்டுமொத்த இந்தியாவையும் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அதாவது அங்குள்ள சாலையில் வாகனத்தில் சென்ற அப்பாவி தொழிலாளர்களை துணை ராணுவ வீரர்கள் துப்பாக்கியால் சுட்டு கொன்றுகுவித்தனர். இதில் 14 பேர் பலியாகினர்.

s

இந்த சம்பவம் அங்கு பெரும் பதற்றத்தை உண்டாக்கியது. ஆனால், தீவிரவாதிகள் என நினைத்து துணை ராணுவம் தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்பட்டது. இதை தொடர்ந்து அந்த கிராம மக்கள் வன்முறை ஈடுபட்டனர். அவர்கள் நடத்திய தாக்குதலில் படுகாயமடைந்த வீரர் ஒருவர், சிகிச்சை பலனின்றி இறந்தார்.

பாதுகாப்பு படையினரால் பொதுமக்கள் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த துப்பாக்கிச்சூடு தொடர்பாக விசாரணை நடத்த, சிறப்பு புலனாய்வு குழுவை நாகலாந்து மாநில முதல்வர் நெபியு ரியோ அமைத்துள்ளார். இக்குழு நேற்று தனது விசாரணையை தொடங்கியது. தாக்குதல் நடத்திய துணை ராணுவ பிரிவின் வீரர்களிடமும் இக்குழு விசாரணை நடத்துவதற்கு ராணுவம் அனுமதி அளித்துள்ளது. இதன் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கப்படும் என ராணுவம் தெரிவித்துள்ளது.

newstm.in

Tags:
Next Story
Share it