Theme Check

பார்ட்டியில் சாராயம் குடித்த 14 பேர் பலி.. பலருக்கு பார்வை பறிபோன பரிதாபம் !!

பார்ட்டியில் சாராயம் குடித்த 14 பேர் பலி.. பலருக்கு பார்வை பறிபோன பரிதாபம் !!

பார்ட்டியில் சாராயம் குடித்த 14 பேர் பலி.. பலருக்கு பார்வை பறிபோன பரிதாபம் !!
X

போலி மதுபானம் குடித்த 14 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபர்பை ஏற்படுத்தி உள்ளது.

பீகாரில் கடந்த 6 ஆண்டுகளாக பூரண மதுவிலக்கு அமலில் உள்ளது. இதன் காரணமாக அங்கு கள்ளச்சந்தையில் போலி மதுபானங்கள் விற்கப்படுகின்றன. குறிப்பாக பண்டிகை காலங்களில் போலி மதுபானங்களில் விற்பனை அமோக இருந்து வருகிறது.

இதனால் அவ்வப்போது உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில் பீகாரின் மாதேபுரா, பாகல்பூர் ஆகிய 2 மாவட்டங்களில் ஹோலி பண்டிகையின்போது கள்ளச்சந்தையில் விற்கப்பட்ட விஷச்சாராயத்தை ஏராளமானோர் வாங்கி குடித்துள்ளனர்.
Death
பண்டிகை கொண்டாட்டத்தில் இருந்த போது, அவர்களுக்கு வாந்தி, பேதி, மயக்கம் ஏற்பட்டது. உடனே அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சிகிச்சை பெற்று வந்தவர்களில் 14 பேர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளனர். இன்னும் பலர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் விஷச்சாராயம் குடித்த பலர் கண் பார்வையை இழந்துள்ளனர்.
Newstm.in
Tags:
Next Story
Share it