Theme Check

பாகல்பூர் வெடிவிபத்தில் 14 பேர் உயிரிழப்பு... அலட்சியத்தால் நிகழ்ந்த சோகம் !!

பாகல்பூர் வெடிவிபத்தில் 14 பேர் உயிரிழப்பு... அலட்சியத்தால் நிகழ்ந்த சோகம் !!

பாகல்பூர் வெடிவிபத்தில் 14 பேர் உயிரிழப்பு... அலட்சியத்தால் நிகழ்ந்த சோகம் !!
X

பட்டாசு வெடித்து ஏற்பட்ட விபத்தில் 14 பேர் உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.

பீகார் மாநிலம் பாகல்பூரின் டாடர்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பயங்கர வெடி விபத்து நிகழ்ந்தது. இதன் தாக்கத்தால் அந்த வீடு முழுவதும் இடிந்து விழுந்ததுடன், அருகில் இருந்த வீடுகள் சேதமடைந்தன. அதிகாலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

மகேந்திர மண்டல் என்பவர், தனது வீட்டின் அருகே பட்டாசு தொழிற்சாலை ஒன்றை நடத்தி வந்துள்ளார். முதல்கட்ட விசாரணையில் இந்த பட்டாசு ஆலை சட்டவிரோதமாக நடத்தப்பட்டு வந்ததாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். வெடி விபத்தில் சிக்கி 10 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இடிபாடுகளை அகற்றும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது. காயமடைந்தவர்கள் மருத்துவ சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். உயிரிழந்தவர்கள் யார் என்று அடையாளம் காண முடியாத அளவுக்கு உடல்கள் சேதம் அடைந்துள்ளன.

bihar accident

வெடிச்சத்தம் பல கிலோமீட்டர் தொலைவுக்கு கேட்டதாக உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர். இதனிடையே, படுகாயத்துடன் மீட்கப்பட்டு பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில், மேலும் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை 14ஆக அதிகரித்துள்ளது.

இதனிடையே, பட்டாசு விபத்து நடந்த அந்த வீட்டில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அந்த வெடிகளின் தன்மை இன்னும் கண்டறியப்படவில்லை என பகல்பூர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த சம்பவத்திற்கு பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

newstm.in

Next Story
Share it