Theme Check

தமிழகத்தில் நீட் தேர்வு எழுத 1.42 லட்சம் மாணவர்கள் விண்ணப்பம் !!

தமிழகத்தில் நீட் தேர்வு எழுத 1.42 லட்சம் மாணவர்கள் விண்ணப்பம் !!

தமிழகத்தில் நீட் தேர்வு எழுத 1.42 லட்சம் மாணவர்கள் விண்ணப்பம் !!
X

தமிழில் நீட் தேர்வு எழுத 31 ஆயிரத்து 803 பேர் விண்ணப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் அரசு மற்றும் தனியாா் மருத்துவக் கல்லூரிகளின் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுா்வேதா, யுனானி, ஹோமியோபதி படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கை நீட் தோ்வு மூலம் நடைபெற்று வருகிறது. நீட் தோ்வை தேசிய தோ்வு முகமை (என்டிஏ) நடத்தி வருகிறது. 2022-23-ஆம் கல்வி ஆண்டு மாணவா் சோ்க்கைக்கான நீட் தோ்வு ஜூலை 17-ஆம் தேதி நடைபெறுமென அறிவிக்கப்பட்டது.

neet

. இந்த நிலையில், இந்தாண்டுக்கு நீட் தோ்வுக்கு இணையதளத்தில் விண்ணப்பிப்பது கடந்த ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி தொடங்கியது. மே மாதம் 6ஆம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் மே 15 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டநிலையில், மேலும், மே 20 ஆம் தேதி இரவு 9 மணி வரை அவகாசத்தை நீட்டித்து தேசிய தேர்வு முகமை உத்தரவிட்டிருந்தது.

இதன்படி இளநிலை மருத்துவ படிப்புகளுக்காக நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் முடிவடைந்த நிலையில், நாடு முழுவதும் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தோரின் எண்ணிக்கை முதல்முறையாக 18 லட்சத்தைத் தாண்டியுள்ளது என்று தேசிய தோ்வுகள் முகமை (NTA) தெரிவித்துள்ளது.

neet

அதே சமயம் தமிழகத்தில் நீட் தேர்வு எழுதுவதற்காக, ஒரு லட்சத்து 42 ஆயிரத்து 286 பேர் விண்ணப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழில் நீட் தேர்வு எழுத 31 ஆயிரத்து 803 பேர் விண்ணப்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

Next Story
Share it