Theme Check

இந்த மாவட்டத்தில் ஒரு மாதம் 144 தடை உத்தரவு.. ஆர்டிஓ அதிரடி அறிவிப்பு..!

இந்த மாவட்டத்தில் ஒரு மாதம் 144 தடை உத்தரவு.. ஆர்டிஓ அதிரடி அறிவிப்பு..!

இந்த மாவட்டத்தில் ஒரு மாதம் 144 தடை உத்தரவு.. ஆர்டிஓ அதிரடி அறிவிப்பு..!
X

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில், இன்று முதல் ஒரு மாதம் 144 தடை உத்தரவு பிறப்பித்து வருவாய் கோட்டாட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை மேல் ஏறி சாமி தரிசனம் செய்ய அனுமதிகோரி போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

இந்நிலையில், சிதம்பரம் நடராஜர் கோவிலில் நடராஜர் சன்னதியில் மேடையேறி தேவாரம் - திருவாசகம் பாடுவது சம்பந்தமாக ஏற்பட்டுள்ள சட்டப் பிரச்சினை காரணமாக, அரசின் அடுத்த முடிவு சட்ட வல்லுநர்கள் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

எனவே, இன்று முதல் ஒரு மாத காலத்திற்கு சிதம்பரம் பகுதியில் மேற்கண்ட நடராஜர் கோவில் சம்பந்தமாக அரசியல் கட்சிகள் சமூக இயக்கங்கள் ஆர்ப்பாட்டம் செய்ய 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளதாக சிதம்பரம் ஆர்டிஓ ரவி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Next Story
Share it