Theme Check

வரும் 18ம் தேதி 144 தடை உத்தரவு.. போலீஸ் கமிஷனர் உத்தரவு..!

வரும் 18ம் தேதி 144 தடை உத்தரவு.. போலீஸ் கமிஷனர் உத்தரவு..!

வரும் 18ம் தேதி 144 தடை உத்தரவு.. போலீஸ் கமிஷனர் உத்தரவு..!
X

கர்நாடகாவில், பெங்களூரு உட்பட மாநிலம் முழுவதும் எஸ்எஸ்எல்சி தேர்வுகள் நிறைவு பெற்றுள்ளது. இதையடுத்து, வரும் 18-ம் தேதி முதல் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுக்கான விடைத்தாள் திருத்தும் பணிகள் நடைபெற உள்ளது.

அதன்படி, பெங்களூரு தெற்கு மண்டலத்தில் 8 மையங்களிலும், வடக்கு மண்டலத்தில் 8 மையங்களிலும் விடைத்தாள் திருத்தும் பணிகள் நடைபெற இருக்கிறது.

விடைத்தாள் திருத்தும் பணியின் போது முறைகேடுகள் நடப்பதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
பெங்களூருவில் இன்று முதல் 4 நாட்கள் மதுக்கடைகள் திறக்க தடை: போலீஸ் கமிஷனர்  உத்தரவு || Police Commissioner Kamal Pant Bangalore Ban on opening Tasmac 4  days
இந்நிலையில், பெங்களூருவில் விடைத்தாள் திருத்தும் பணிகள் நடைபெறும் கல்வி மையங்களை சுற்றி 200 மீட்டர் சுற்றளவுக்கு 144 தடை உத்தரவு பிறப்பித்து போலீஸ் கமிஷனர் கமல்பந்த் உத்தரவிட்டுள்ளார்.

வருகிற 18-ம் தேதியில் இருந்து விடைத்தாள் திருத்தும் பணி நிறைவு பெறும் வரை இந்த 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Next Story
Share it