Theme Check

145 கோடி கொரோனா தடுப்பூசி.. மக்களுக்கு செலுத்தி மத்திய அரசு சாதனை..!

145 கோடி கொரோனா தடுப்பூசி.. மக்களுக்கு செலுத்தி மத்திய அரசு சாதனை..!

145 கோடி கொரோனா தடுப்பூசி.. மக்களுக்கு செலுத்தி மத்திய அரசு சாதனை..!
X

இந்தியாவில் கொரோனா வைரசுக்கான தடுப்பூசியை மக்களுக்கு செலுத்தும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. அதன்படி, 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இரண்டு ‘டோஸ்’களாக தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. நாளை மறுநாள் முதல், 15 - 18 வயதுக்கு உட்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் துவங்கப்பட உள்ளன.

இந்நிலையில், மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ள தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை நேற்று 145 கோடியை கடந்தது. நேற்று மாலை 6.15 மணி நிலவரப்படி 145 கோடியே 10 லட்சத்து 38 ஆயிரத்து 356 டோஸ்கள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளன.

இந்த எண்ணிக்கை நேற்று இரவு மேலும் உயர்ந்திருக்கும். நேற்று செலுத்தப்பட்ட மொத்த டோஸ்கள் குறித்த விபரங்கள் இன்று காலை வெளியிடப்படும்.

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறியதாவது: “மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ள தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 145 கோடியை கடந்துள்ளது.

2021ம் ஆண்டை இந்த புதிய மைல்கல் சாதனையுடன் நிறைவு செய்வது மகிழ்ச்சியாக உள்ளது. டாக்டர்கள், ஆராய்ச்சியாளர்கள், சுகாதார பணியாளர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு நன்றி” என அவர் கூறினார்.

Next Story
Share it