தமிழ்நாட்டில் இன்று 14ஆவது தடுப்பூசி முகாம்!!
தமிழ்நாட்டில் இன்று 14ஆவது தடுப்பூசி முகாம்!!

தமிழகம் முழுவதும் இன்று 50,000 இடங்களில் மாலை 5 மணி வரை 14ஆவது தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.
தமிழகத்தில் செப்டம்பர் 12ஆஆம் தேதி முதல் மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெறுகின்றன. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் நடைபெற்று வந்த தடுப்பூசி முகாம் பிறகு வாரத்தில் இரு தினங்கள் என ஞாயிறு மற்றும் வியாழக்கிழமை நடைபெற்றது.
தற்போது சனிக்கிழமை தோறும் தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. இதுவரை நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாம்கள் மூலம் 2.43 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

ஆரம்ப சுகாதார நிலையங்கள் அரசு மருத்துவமனைகள் அங்கன்வாடி மையங்கள் சத்துணவு மையங்கள் என பல்வேறு இடங்களில் இந்த தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.
தமிழகத்தில் இன்னும் 1.09 கோடி பேர் முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தி கொள்ளவில்லை. மேலும் 93.4 லட்சம் பேர் உரிய நேரத்தில் இரண்டாவது டோஸ் எடுத்துக்கொள்ளவில்லை.
இரண்டாவது டோஸ் செலுத்தாதவர்கள் இந்த முகாம்களை பயன்படுத்தி உடனே தடுப்பூசி செலுத்தி கொள்ளுமாறு சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

சென்னையில் மெகா தடுப்பூசி முகாம் 1,600 இடங்களில் நடைபெறுகிறது. இது வரை 10.38 லட்சம் பேர் உரிய நேரத்தில் இரண்டு டோஸ் எடுத்துக்கொள்ளவில்லை என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஒமைக்ரான் பரவல் இருப்பதால் மக்கள் உரிய நேரத்தில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.
newstm.in

