Theme Check

ஒரே குடும்பத்தில் 150 மருத்துவர்கள்!!

ஒரே குடும்பத்தில் 150 மருத்துவர்கள்!!

ஒரே குடும்பத்தில் 150 மருத்துவர்கள்!!
X

டெல்லியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 150 உறுப்பினர்கள் கடந்த 102 ஆண்டுகளாக மருத்துவராகி சேவையாற்றி வருகின்றனர்.

நாட்டின் எதிர்காலம் கல்வி மற்றும் சுகாதார சேவைகளின் தரத்தைப் பொறுத்தது என மகாத்மா காந்தி கூறியதை கேட்டு, 1920ஆம் ஆண்டு லாலா ஜீவன்மால் என்பவர் தனது நான்கு மகன்களையும் மருத்துவராக்க முடிவு செய்தார்.

அப்போது தொடங்கிய இவர்களின் மருத்துவ சேவை, பல தலைமுறைகளை கடந்து 102ஆண்டுகளாக இந்த குடும்பத்தை சேர்ந்த அனைவரும் மருத்துவராகி மக்களுக்கு சேவையாற்றி வருகின்றனர்.

doctor

மருத்துவ உலகில் பொதுமக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்ற அர்ப்பணிப்புடன் தொடர்ந்து தங்களது குடும்ப உறுப்பினர்கள் மருத்துவ படிப்பை பயின்று வருவதாக அவர்கள் கூறுகின்றனர் .

தற்போது இந்த மருத்துவ குடும்பத்தில் 150 க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவர்களாக உள்ளனர். குடும்பத்தில் உள்ள அனைவரையும் மருத்துவராக்கும் மரபை கடைபிடிப்பது மிகவும் சவாலானது.

doctor

ஆனால் அதையும் கடந்த மருத்துவர்களாகி சாதனை படைத்து வருகின்றனர். டெல்லியில் உள்ள இந்த ஜீவன்மால் மருத்துவமனையில் பணம் இல்லை என்பதற்காக எந்த நோயாளியையும் திருப்பி அனுப்புவதில்லை என்ற கொள்கையை கடைபிடிப்பதாக அவர்கள் கூறுகின்றனர்.

கொரோனா கால கட்டத்தில் இந்த மருத்துவ குடும்பத்தை சேர்ந்த இரண்டு மருத்துவர்கள் உயிரிழந்த சோகமும் நடந்தது. இருப்பினும் தங்களது சேவை இன்னும் பல ஆண்டுகள் தொடரும் என அவர்கள் கூறுகின்றனர்.

newstm.in

Next Story
Share it