16 யூடியூப் சேனல்கள் முடக்கம்: மத்திய அரசு அதிரடி..!!
16 யூடியூப் சேனல்கள் முடக்கம்: மத்திய அரசு அதிரடி..!!

பாகிஸ்தானில் இருந்து இயங்கும் 6 யூடியூப் சேனல்கள் உட்பட 16 யூடியூப் சேனல்களை மத்திய அரசு முடக்கியுள்ளது. முடக்கப்பட்டுள்ள யூடியூப் சேனல்கள் மற்றும் பேஸ்புக் கணக்குகளுக்கு 68 கோடிக்கும் அதிகமான பார்வையாளர்கள் உள்ளனர்.
இதுகுறித்து தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ''முடக்கப்பட்டுள்ள யூடியூப் சேனல்கள் மற்றும் பேஸ்புக் கணக்குகள், இந்தியாவில் பீதியை உருவாக்கவும், பிரிவினையை தூண்டவும், பொது ஒழுங்கை சீர்குலைக்கவும் பொய்யான, சரிபார்க்கப்படாத தகவல்களைப் பரப்பி வருகின்றன.
மேலும் தகவல் தொழில்நுட்ப விதிகள், 2021-ன் விதி 18-ன் கீழ் தேவைப்படும் தகவல்களை அவர்கள் யாரும் அமைச்சகத்திற்கு வழங்கவில்லை'' என்று கூறியுள்ளது. சமீபத்தில் 22 யூடியூப் சேனல்களுக்கு அதிரடியாக தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.
Tags:
Next Story