Theme Check

ரயிலின் 16 பெட்டிகள் தடம் புரண்டு பெரும் விபத்து!!

ரயிலின் 16 பெட்டிகள் தடம் புரண்டு பெரும் விபத்து!!

ரயிலின் 16 பெட்டிகள் தடம் புரண்டு பெரும் விபத்து!!
X

குஜராத்தில் சரக்கு ரயிலின் 16 பெட்டிகள் தடம் புரண்டு பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது.

தகோத் மாவட்டத்தில் உள்ள மங்கள் மகுடி ரயில் நிலையம் அருகே இன்று அதிகாலை 1 மணியளவில் சரக்கு ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. திடீரென அந்த ரயில் தடம் புரண்டு விபத்திற்குள்ளானது.

ரத்லம் - மும்பைக்கு இடைப்பட்ட பகுதியில் ரயிலின் 16 பெட்டிகள் தடம் புரண்டன. ரயிலின் மீது செல்லும் மின் கம்பிகளும் உடைந்தன. இதனால் ரத்லம் முதல் மும்பை வரையிலான இரு பகுதியிலும் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

guj derailed

ரயில் சேவை இன்று நண்பகல் 12 மணிவரை நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பெரிய விபத்து ஏற்படாமல் தவிர்க்கப்பட்டு உள்ளது. மத்திய பிரதேசம் மற்றும் குஜராத்துக்கு இடைப்பட்ட ரத்லம் ரெயில்வே மண்டலத்திற்கு உட்பட்ட பகுதியில் ரயில் தடம் புரள்வது, 3 நாளில் ஏற்படும் 2ஆவது சம்பவம்.

கடந்த 3 நாட்களுக்கு முன் ரத்லம் ரயில் நிலையத்தில் வீர்பூமி எக்ஸ்பிரசின் 2 பெட்டிகள் தடம் புரண்டன. இதன்பின்னர் அனைத்து ரயில்வே பணியாளர்களும் சம்பவ பகுதிக்கு சென்று பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் இன்று மீண்டும் ரயில் பெட்டிகள் தடம் புரண்டுள்ளன.

newstm.in

Next Story
Share it