Theme Check

சிக்கினான் சிங்க முக கொள்ளையன்.. 16 கிலோ தங்கம், அரை கிலோ வைர நகைகள் மீட்கப்படுமா !

சிக்கினான் சிங்க முக கொள்ளையன்.. 16 கிலோ தங்கம், அரை கிலோ வைர நகைகள் மீட்கப்படுமா !

சிக்கினான் சிங்க முக கொள்ளையன்.. 16 கிலோ தங்கம், அரை கிலோ வைர நகைகள் மீட்கப்படுமா !
X

வேலூர்- காட்பாடி சாலையில் உள்ள ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையின் சுவரில் துளைபோட்டு உள்ளே புகுந்து அண்மையில் கொள்ளையடிக்கப்பட்டது. 16 கிலோ தங்க நகைகள், அரை கிலோ வைர நகைகள் திருடுபோனது. இந்த சம்பவம் வேலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கடையின் உள்ளே புகுந்த மர்மநபர் அங்கிருந்த சிசிடிவி கேமிராக்கள் மீது பெயிண்ட் ஸ்பிரே அடித்து பின்னர் நகைகளை கொள்ளை அடித்து சென்றான். அதில் ஒருவன் மட்டுமே இக்கொள்ளையில் ஈடுபட்டதாக பதிவாகியிருந்தது.

இதுதொடர்பாக வெளியாகிய கண்காணிப்பு வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், மர்மநபர் சிங்க உருவம்கொண்ட முகமூடி மற்றும் தலையில் விக் அணிந்து உள்ளே வருவதும், ஒவ்வொரு கண்காணிப்பு கேமராக்களையும் பெயிண்ட் ஸ்பிரே மூலம் மறைப்பதும் பதிவாகி இருந்தது. கொள்ளையனை பிடிக்க 4 டி.எஸ்.பி. தலைமையில் 8 தனிப்படை அமைக்கப்பட்டது.

vlr thest

காட்பாடி சாலையில் பொதுஇடங்களில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. இந்த நிலையில் சம்பவம் நடைபெற்ற நேரத்தில் நகைக்கடையின் முன்பு நீண்டநேரம் ஆட்டோ ஒன்று சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்றிருந்தது அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது.

அந்த ஆட்டோ குறித்து போலீசார் விசாரணையில் இறங்கினர். கொள்ளைபோன நகை கடையின் அருகே காலி இடத்தை ஒட்டியவாறு தங்கும் விடுதி ஒன்று கட்டப்பட்டு வருகிறது. அந்த தங்கும் விடுதியில் கட்டிட பணியில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

police

இந்த கொள்ளை சம்பவத்தில் கட்டிட தொழிலாளர்களுக்கு தொடர்பு உள்ளதா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். கட்டிட தொழிலாளர்கள் 25 பேரின் புகைப்படம்- கைரேகைகள் போன்ற விவரங்களை போலீசார் சேகரித்து விசாரணை நடத்தினர்.

இந்த நிலையின் தனிப்படை போலீசாரின் அதிரடி வேட்டையில் நகை கடையில் கொள்ளையடித்த பள்ளி கொண்டா பகுதியை சேர்ந்த பலே திருடன் சிக்கியுள்ளான். அவனை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கொள்ளையடித்த 16 கிலோ தங்கநகைகள், அரை கிலோ வைர நகைகளை மீட்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் கொள்ளைக்கு உடந்தையாக இருந்தவர்கள் குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முழுமையான விசாரணைக்கு பிறகு முழுமையான தகவல்கள் வெளியாகும் என போலீசார் தரப்பில் தெரிவித்தனர்.

newstm.in

Next Story
Share it