மே மாதத்தில் மட்டும் 16 முறை விலை உயர்வு !!
மே மாதத்தில் மட்டும் 16 முறை விலை உயர்வு !!

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து கொள்கின்றன. அந்த வகையில், பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறை எண்ணெய் நிறுவனங்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
சென்னையில் கடந்த மாத (ஏப்ரல்) தொடக்கத்தில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் காணப்பட்ட நிலையில், ஏப்ரல் 15 தேதி பெட்ரோல் லிட்டர் 15 காசுகள், டீசல் லிட்டர் 13 காசுகள் குறைந்து விற்பனை செய்யப்பட்டது. இந்த மாத தொடக்கத்தில் இருந்தே ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை தொட்ட வண்ணம் உள்ளது. கடந்த 2 வாரங்களாக ஒருநாள் விட்டு ஒருநாள் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மே மாதம் தொடக்கத்தில் பெட்ரோல் லிட்டர் 92.43 ரூபாய்க்கும், டீசல் லிட்டர் 85.75 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. ஆனால் இன்று (மே 31) பெட்ரோல் விலை 95.76 ரூபாய்க்கும், டீசல் விலை 25 காசுகள் உயர்ந்து லிட்டர் 89.90 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மே மாதத்தில் மட்டும் பெட்ரோல், டீசல் விலை 16 முறை உயர்த்தப்பட்டு உள்ளது. இதனால் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.33 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.4.15 காசுகளும் உயர்ந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த முழு ஊரடங்கு காலத்திலும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக பல பொருட்களின் விலை உயர்வு மற்றும் சாமானிய மக்களின் வாழ்வாதாரத்தை பதம் பார்த்துள்ளது.

