19 வயது பெண்ணை திருமணம் செய்து கொண்ட 16 வயது சிறுவன்..!
சமையல் எரிவாயு சிலிண்டரை டெலிவிரி செய்ய வரும் போது உருவான காதல் காரணமாக 19 வயது பெண்ணும், 16 வயது சிறுவனும் திருமணம் செய்து கொண்ட சம்பவம் கர்நாடகாவில் நடந்துள்ளது.

சமையல் எரிவாயு சிலிண்டரை டெலிவிரி செய்ய வரும் போது உருவான காதல் காரணமாக 19 வயது பெண்ணும், 16 வயது சிறுவனும் திருமணம் செய்து கொண்ட சம்பவம் கர்நாடகாவில் நடந்துள்ளது.
பெங்களூரு நகரைச் சேர்ந்த 16 வயது சிறுவன் ஒருவன், அங்குள்ள ஒரு பகுதியில் சமையல் எரிவாயு சிலிண்டரை வீடுகளுக்குச் சென்று டெலிவிரி செய்யும் பணிகளை செய்து வருகிறான்.அவ்வாறு அந்நகரிலுள்ள வீட்டுக்கு வழக்கம் போல சிலிண்டர் டெலிவிரி செய்ய சென்ற போது 19 வயது இளம்பெண் ஒருவருடன் சிறுவனுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளிடைவில் அந்த பழக்கம் காதலாக மாறியுள்ளது.
இவர்களுடைய காதல் இருவீட்டாருக்கும் தெரிய வந்த நிலையில், பெண்ணின் பெற்றோர் ஆரம்பத்தில் மறுத்து வந்துள்ளனர். ஆனால் சிறுவடன் தங்கள் மகள் ஓடிவிட்டால் அவமானம் ஏற்பட்டுவிடும் என்ற அச்சத்தால் திருமணத்திற்கு அவர்கள் சம்மதம் தெரிவித்தனர்.இதையடுத்து சிறுவனுக்கும், அந்த இளம்பெண்ணுக்கும் திருமணம் நடந்துள்ளது. எனினும், இந்த திருமணத்தை ஏற்க முடியாமல் பெண்ணின் பெற்றோர் நேபாளத்திற்கு சென்றுவிடனர்.
இந்த திருமணம் குறித்து அக்கம்பக்கத்தில் வசிப்பவர்களுக்கு தகவல் பரவியுள்ளது. திருமணம் முடிந்து ஒருவாரம் கழித்து, சிறுவனுக்கு 16 வயது தான் என காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.உடனே சிறுவனின் வீட்டுக்கு விரைந்து வந்த போலீசார் பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சிறுவனின் பிறப்புச் சான்றிதழை பெற்று வயது குறித்து ஆய்வு செய்தனர்.
அப்போது திருமணம் செய்து கொண்ட சிறுவனுக்கு வயது 16 தான் என்பது உறுதியானது. இதையடுத்து அந்த திருமணத்தை குழந்தை திருமணம் என்று போலீசார் பதிவு செய்தனர். மேலும் இளம்பெண் மற்றும் சிறுவனின் பெற்றோர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் அவர்களிடம் விசாரனை செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
newstm.in

