Theme Check

161 அடி உயர பஞ்சமுக ஆஞ்சநேயர் சிலை.. திறந்து வைத்தார் முதல்வர்..!

161 அடி உயர பஞ்சமுக ஆஞ்சநேயர் சிலை.. திறந்து வைத்தார் முதல்வர்..!

161 அடி உயர பஞ்சமுக ஆஞ்சநேயர் சிலை.. திறந்து வைத்தார் முதல்வர்..!
X

கர்நாடக மாநிலம் தும்கூர் மாவட்டம் குனிகல் நகரில் பித்தனகெரே பசவேஸ்வரா மடம் உள்ளது. அந்த மடத்தில், 161 அடி உயர பஞ்சமுக ஆஞ்சநேயர் சிலை நிறுவப்பட்டுள்ளது.

உலகிலேயே மிகவும் உயரமான ஆஞ்சநேயர் சிலையாக அமைக்கப்பட்டுள்ள இந்த சிலையை, ராமநவமியையொட்டி பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை நேற்று திறந்து வைத்தார்.
Image
இதையடுத்து அவர் பேசுகையில், “ராம நவமியை முன்னிட்டு இந்த மடம் பல்வேறு புனிதமான பணிகளை மேற்கொண்டு வருகிறது. வரும் நாட்களில் இந்த பகுதியில் பெரிய அளவில் வளர்ச்சி பணிகள் நடைபெறும்.

ராமாயணத்தில் பஞ்சமுகி ஆஞ்சநேயாவுக்கு சிறப்பு இடம் உள்ளது. அனுமன், உலகின் நலனுக்காக அவதாரம் எடுத்தார். ஆஞ்சநேயருக்கு 161 அடி உயர சிலை நிறுவப்பட்டது என்பது கடவுளின் விருப்பம். இந்த சிலையை செதுக்கிய சிற்பிகள் சிறப்பான பணியை செய்துள்ளனர்" என்றார்.

Next Story
Share it