நாடு முழுவதும் விறுவிறுப்பு.. இதுவரை 1.64 கோடி சிறுவர்- சிறுமிகளுக்கு தடுப்பூசி !!
நாடு முழுவதும் விறுவிறுப்பு.. இதுவரை 1.64 கோடி சிறுவர்- சிறுமிகளுக்கு தடுப்பூசி !!

இந்தியாவில் கொரோனாவும் ஒமைக்ரான் பாதிப்பும் திடீரென அதிகரித்து பரவி வருகிறது. இதனையொட்டி பல்வேறு மாநிலங்கள் கட்டுப்பாடுகள் விதித்துள்ளன. மேலும் தடுப்பூசி செலுத்தும் பணியும் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில், இந்தியாவில் 15 முதல் 18 வயது வரையிலான சிறுவர்- சிறுமியருக்கு கடந்த 3ஆம் தேதி முதல் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதில் அனைத்து மாநிலங்களும் தீவிரமாக தடுப்பூசி போட்டு வருகின்றன.

இதில் நேற்று காலை முதல் இரவு 7 மணி வரை 35 லட்சத்து 98 ஆயிரத்து 243 சிறுவர், சிறுமிகள் முதல் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். இதன் மூலம் இதுவரை நாடு முழுவதும் மொத்தம் 1.64 கோடி சிறுவர்- சிறுமிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது. இத்துடன் நாடு முழுவதும் இதுவரை போடப்பட்ட தடுப்பூசிகளின் மொத்த எண்ணிக்கை 148.58 கோடியாக அதிகரித்து இருக்கிறது.

பல்வேறு மாநிலங்கள் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு விதித்துள்ளதால் அதற்கு முன்பாக சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்த முடிவு செய்துள்ளன. அந்த வகையில் பள்ளிகளுக்கே சென்றும் மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
newstm.in

