Theme Check

#BREAKING பொங்கல் பண்டிகைக்கு 16,768 சிறப்பு பேருந்துகள்.. அரசு அறிவிப்பு !

#BREAKING பொங்கல் பண்டிகைக்கு 16,768 சிறப்பு பேருந்துகள்.. அரசு அறிவிப்பு !

#BREAKING பொங்கல் பண்டிகைக்கு 16,768 சிறப்பு பேருந்துகள்.. அரசு அறிவிப்பு !
X

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ஜன.11 முதல் 13 வரை 16,768 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொங்கல் என்றாலே கொண்டாட்டம் தான். இதற்காக சென்னையில் வசிக்கும் வெளிமாவட்ட மக்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுப்பர். குறிப்பாக தென்மாவட்டங்களுக்கு தான் அதிகளவில் மக்கள் செல்வர். இதனால் பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் மக்கள் கூட்டம் நிரம்பி வழியும். இதனை தடுக்க சிறப்பு பேருந்துகள் அரசு சார்பில் இயக்கப்படும்.

அந்த வகையில், 2022 ஜன.14ஆம் தேதி வெள்ளிக்கிழமை பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, பலரும் குடும்பத்துடன் சொந்த ஊருக்கு செல்வது வழக்கம். 30 நாட்களுக்கு முன்பு அரசுவிரைவு பேருந்துகளில் டிக்கெட்முன்பதிவு செய்யும் வசதி இருப்பதால், தற்போது ஏராளமானோர் முன்பதிவு செய்து வருகின்றனர்.

special bus

இந்த நிலையில் சிறப்பு பேருந்துகள் தொடர்பாக போக்குவரத்து அமைச்சர் ராஜகண்ணப்பன் இன்று ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ஜனவரி 11 முதல் 13ஆம் தேதி வரை 16,768 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். இதில் சென்னையில் இருந்து மட்டும் 10,300 பேருந்துகள் இயக்கப்படும். இதற்கான முன்பதிவு நடந்து வருகிறது. கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 10 முன்பதிவு மையங்கள், தாம்பரத்தில் ஒரு முன்பதிவு மையம் செயல்படுத்தப்படும்.

பொங்கல் பண்டிகை முடித்து சென்னை திரும்புவதற்கு ஏதுவாக ஜனவரி 16 முதல் 18 வரை 16,709 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். கோயம்பேடு, மாதவரம், தாம்பரம், பூந்தமல்ல, கே.கே.நகர் என 5 சிறப்பு பேருந்து நிலையங்கள் ஏற்படுத்தப்படும். கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து 5 சிறப்பு பேருந்து நிலையங்களுக்கு இணைப்பு பேருந்துகள் இயக்கப்படும். இணைப்பு பேருந்துகள் 24 மணிநேரமும் இயங்கும். ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் 18004256151 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம், என்றுர் அவர் கூறினார்.

special bus

இதனிடையே, பொங்கல் பண்டிகைக்கு செல்ல முன்பதிவு ஏற்கனவே தொடங்கிவிட்டது. அந்த வகையில் இதுவரை சுமார் 10 ஆயிரம் டிக்கெட்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.


newstm.in


Next Story
Share it