Theme Check

16 வயது சிறுமி சீரழிப்பு.. தற்கொலைக்கு காரணம்.. மாதவரம் போலீஸ்காரர் கைது..!

16 வயது சிறுமி சீரழிப்பு.. தற்கொலைக்கு காரணம்.. மாதவரம் போலீஸ்காரர் கைது..!

16 வயது சிறுமி சீரழிப்பு.. தற்கொலைக்கு காரணம்.. மாதவரம் போலீஸ்காரர் கைது..!
X

சென்னை, மாதவரம் காவல் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரிபவர் மகேஷ் (27). இவர், கடந்த 2020-ம் ஆண்டு சமூக வலைதளம் மூலம் சென்னையைச் சேர்ந்த 16 வயது சிறுமியுடன் நட்பாக பழகி வந்தார்.

நாளடைவில், சிறுமிக்கு திருமண ஆசை காட்டி, இரண்டு முறை கர்ப்பமாக்கி கட்டாய கருக்கலைப்பு செய்ய வைத்துள்ளார். அதன்பின்னர், சிறுமியுடனான தொடர்பை துண்டித்தார்.

இதனால் மனவேதனை அடைந்த சிறுமி, தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். அதற்கு முன், போலீஸ்காரர் மகேஷ் தன் வாழ்வை சீரழித்தது பற்றி ஸ்மார்ட் போனில் வீடியோ பதிவு செய்து, அதையே தன் வாக்குமூலமாக எடுத்துக் கொள்ளுமாறு கூறி இருந்தார்.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோர், எம்.கே.பி. நகர் மகளிர் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் முறையாக விசாரிக்காமல், தற்கொலை என வழக்குப் பதிந்துள்ளனர். இதனால் சிறுமியின் பெற்றோர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், சிபிசிஐடி போலீசாரின் விசாரணைக்கு உத்தரவிட்டது. விசாரணையில், சிறுமி வாக்குமூலத்தில் கூறிய அனைத்து விவரங்களும் உண்மை என தெரிய வந்தது. இதையடுத்து, மகேஷை பிடித்து விசாரித்தனர். அவரும் குற்றத்தை ஒப்புக் கொண்டார்.

இதையடுத்து, போக்சோ மற்றும் பாலியல் பலாத்காரம், கடத்தல், தற்கொலைக்கு தூண்டுதல் உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின் கீழ் போலீஸ்காரர் மகேஷை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.


தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள மகேஷை காவலில் எடுத்து விசாரிக்க, எழும்பூர் நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் இன்று மனு தாக்கல் செய்கின்றனர்.

Next Story
Share it