Theme Check

தாய் இறந்து, தந்தை கைவிட்ட 16 வயது சிறுமி - பாலியல் தொல்லை கொடுத்த சித்தப்பா

தாய் இறந்து, தந்தை கைவிட்ட 16 வயது சிறுமி - பாலியல் தொல்லை கொடுத்த சித்தப்பா

தாய் இறந்து, தந்தை கைவிட்ட 16 வயது சிறுமி - பாலியல் தொல்லை கொடுத்த சித்தப்பா
X

பொள்ளாச்சி அருகே 16 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை தந்த சித்தப்பாவை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 16 வயது மாணவி. இவரது தாய் இறந்து விட்ட நிலையில், தந்தையும் கைவிட்டுவிட்டு சென்றுவிட்டார். அம்மாவின் தங்கையான சித்தியின் பராமரிப்பில் அந்த மாணவி இருந்துள்ளார். அந்த மாணவி பள்ளி ஒன்றின் விடுதியில் தங்கி படித்து வருகிறார்.

தாய் இறந்து, தந்தை கைவிட்ட 16 வயது சிறுமி - பாலியல் தொல்லை கொடுத்த சித்தப்பா இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் மாணவி சிகிச்சை பெற்றுவிட்டு சித்தி வீட்டுக்கு வந்துள்ளார். வீட்டில் சிறுமி தனியாக இருந்தபோது, சித்தப்பா பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. சிறுமி அலறல் சத்தம் போட்டதையடுத்து அக்கம்பக்கத்தினர் வந்து அவரை மீட்டனர்.

தாய் இறந்து, தந்தை கைவிட்ட 16 வயது சிறுமி - பாலியல் தொல்லை கொடுத்த சித்தப்பா

உடனே அங்கிருந்து சித்தப்பா தப்பிச் சென்றார். உறவினர்கள் உதவியுடன் பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரின்பேரில் மாணவியின் சித்தப்பா மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பியோடியவரை கைது செய்தனர்.

newstm.in

Tags:
Next Story
Share it