Theme Check

பப்ஜி விளையாடுவதை தடுத்த தாயை சுட்டுக் கொன்ற 16 வயது மகன்!!

பப்ஜி விளையாடுவதை தடுத்த தாயை சுட்டுக் கொன்ற 16 வயது மகன்!!

பப்ஜி விளையாடுவதை தடுத்த தாயை சுட்டுக் கொன்ற 16 வயது மகன்!!
X

பப்ஜி விளையாட விடாமல் தடுத்த தாயை 16 வயது மகன் சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவில் ஒரு வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து அங்கு வந்த போலீஸார் வீட்டிலிருந்த 16 வயது சிறுவன் மற்றும் அவரது தந்தையிடம் விசாரணை நடத்தினர்.

பிறகு வீட்டில் பூட்டி இருந்த அறையை திறந்துபார்த்தபோது அழுகிய நிலையில் பெண்ணின் சடலம் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். மேலும் இறந்தவர் சிறுவனின் தாய் என்பது தெரியவந்தது. அதுகுறித்து விசாரணை நடத்திய போது திடுக்கிடும் தகவல் வெளியானது.

gun

சிறுவன் பப்ஜி விளையாட்டிற்கு அடிமையானதால் அவரது தாய் கண்டித்து வந்துள்ளார். இருப்பினும் சிறுவன் தொடர்ந்து கேமை தனது செல்போனில் விளையாடிவந்துள்ளார். ஆவேசமடைந்த அவரது தாய் கேம் விளையாட விடாமல் தடுத்துள்ளார்.

இதில் ஆத்திரமடைந்த அச்சிறுவன் வீட்டிலிருந்த தந்தையின் துப்பாக்கியை எடுத்து தாயைச் சுட்டு கொலை செய்துள்ளார். பிறகுத் தாயின் உடலை ஒரு அறையில் பூட்டிவைத்து, துர்நாற்றம் அடிக்காமல் இருக்க அறை முழுவதும் சென்ட் அடித்துள்ளார்.

நடந்த சம்பவத்தை வெளியே சொல்லக்கூடாது என தங்கையை மிரட்டி வந்துள்ளார். இதையடுத்து சிறுவனைக் கைது செய்த போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

newstm.in

Next Story
Share it