Theme Check

இந்தியாவில் 17 லட்சம் பேருக்கு எய்ட்ஸ்.. முதலிடத்தில் எந்த மாநிலம் தெரியுமா..?

இந்தியாவில் 17 லட்சம் பேருக்கு எய்ட்ஸ்.. முதலிடத்தில் எந்த மாநிலம் தெரியுமா..?

இந்தியாவில் 17 லட்சம் பேருக்கு எய்ட்ஸ்.. முதலிடத்தில் எந்த மாநிலம் தெரியுமா..?
X

இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளில் 17 லட்சத்திற்கும் அதிகமானோர் எய்ட்ஸ் பாதிப்புக்கு ஆளாகி உள்ளதாக தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது.

மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சந்திரசேகர் கவுர் என்பவர் நாட்டின் எய்ட்ஸ் பாதிப்பு நிலவரம் குறித்து தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பிடம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் அடிப்படையில் விவரம் கேட்டிருந்தார்.

இதற்கு தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு சமீபத்தில் அளித்த பதில் வருமாறு: ‘நாட்டில், 2011 - 2021க்கு இடையே பாதுகாப்பற்ற பாலுறவின் மூலம் 17 லட்சத்து 8,777 பேர் எய்ட்ஸ் பாதிப்புக்கு உள்ளாகினர்.

மாநில வாரியான பாதிப்பில் ஆந்திரா முதலிடத்தில் உள்ளது. இம்மாநிலத்தில் 10 ஆண்டுகளில் 3.18 லட்சம் பேர் எய்ட்ஸ் பாதிப்புக்கு உள்ளாகினர்.

அடுத்ததாக, மகாராஷ்டிராவில் 2.84 லட்சம் பேரும், கர்நாடகாவில் 2.12 லட்சம், தமிழகத்தில் 1.16 லட்சம் பேரும், உத்தர பிரதேசத்தில் 1.10 லட்சம் பேரும் பாதிப்புக்கு ஆளாகினர்.

அத்துடன், 2011 - 2021க்கு இடையே ரத்த பரிமாற்றங்களின் மூலம் 15 ஆயிரத்து 782 பேருக்கு எய்ட்ஸ் பரவி உள்ளது. இதுதவிர, தாயிடம் இருந்து 4,423 குழந்தைகள் இந்த பாதிப்பை பெற்றுள்ளனர்’ என அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story
Share it