Theme Check

17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.. அதிமுக நிர்வாகிக்கு போலீஸ் வலை..!

17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.. அதிமுக நிர்வாகிக்கு போலீஸ் வலை..!

17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.. அதிமுக நிர்வாகிக்கு போலீஸ் வலை..!
X

சென்னை மாதவரம் அடுத்த மாத்தூரில், அதிமுக மாநில இலக்கிய அணி துணைச் செயலாளர் சிவில் முருகேசன் என்பவருக்கு சொந்தமான பெட்ரோல் பங்க் இயங்கி வருகிறது. இந்த பெட்ரோல் பங்க்கில் 17 வயது சிறுமி ஒருவர் பணிபுரிந்து வருகிறார்.

சம்பவத்தன்று அலுவலகத்தில் உள்ளே இருந்த சிவில் முருகேசன் கணக்கு சரி பார்க்க வேண்டும் என்று அந்த சிறுமியை உள்ளே வரச் சொல்லியிருக்கிறார்.

உள்ளே சென்ற சிறுமி கணக்குகளை ஒப்படைத்துக் கொண்டிருந்தபோது சிவில் முருகேசன் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.
AIADMK member sexually harassed a 17year old girl | 17 வயது சிறுமிக்கு  பாலியல் தொல்லை கொடுத்த 'அதிமுக நிர்வாகி' தலைமறைவு | News in Tamil
இதனால் அங்கிருந்து தப்பிக்க முயன்ற சிறுமியின் கையை பிடித்து இழுத்து தகாத செயல்களில் ஈடுபட்டதுடன், சம்பவம் குறித்து வெளியே சொன்னால் உன்னையும் உன் குடும்பத்தையும் கொலை செய்து விடுவேன் என மிரட்டியுள்ளார்.

பணி முடிந்து வீட்டிற்கு சென்ற சிறுமி இது குறித்து தனது தாயாரிடம் தெரிவித்துள்ளார். அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர், சென்னை எண்ணூரில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இதன் பேரில் விசாரிக்க போலீசார் சென்றபோது, சிவில் முருகேசன் தலைமறைவானார். இதையடுத்து சிவில் முருகேசன் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை பிடிக்க தனிப்படை அமைத்துள்ளனர்.

Next Story
Share it