Theme Check

மூதாட்டியை கொலை செய்து நகை திருடிய 17 வயது சிறுமி!!

மூதாட்டியை கொலை செய்து நகை திருடிய 17 வயது சிறுமி!!

மூதாட்டியை கொலை செய்து நகை திருடிய 17 வயது சிறுமி!!
X

நகைக்காக 17 வயது சிறுமி மூதாட்டியின் கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியைச் சேர்ந்த நாகலட்சுமி என்ற மூதாட்டி தனது இரண்டு மகன்களுடன் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று வழக்கம்போல் அவரது மகன்கள் வேலைக்கு சென்றனர்.

அப்போது வீட்டில் மூதாட்டி மட்டும் தனியாக இருந்துள்ளார். இதையடுத்து அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் மூதாட்டியை பார்க்க வீட்டிற்கு வந்தார். அப்போது மூதாட்டி கொலை செய்யப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

Murder 3

இது குறித்து அவரது மகன்களுக்கும், போலீஸாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. பிறகு அங்கு வந்த போலீஸார் மூதாட்டியின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும் அப்பகுதியில் இருந்த சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்த போது சிறுமி ஒருவர் நாகலட்சுமியின் வீட்டிற்குள் நுழைந்து பதிவாகியிருந்தது. இதையடுத்து போலீஸார் அவரை பிடித்து விசாரணை மேற்கொண்ட போது அதிர்ச்சி தகவல் வெளியானது.

arrest

அச்சிறுமி ஒருவரை காதலித்து வந்துள்ளார். அவர்களின் திருமணத்திற்கு பணம் தேவைப்பட்டுள்ளது. இதனால் அச்சிறுமி மூதாட்டி நாகலட்சுமியை கொலை செய்து 15 சவரன் நகைகளை திருடியதை ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து போலீஸார் வழக்கு பதிவு செய்து, சிறுமிக்கு 17 வயதுதான் ஆவதால் அவரை சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் அடைத்துள்ளனர். மேலும் அவரிடம் இருந்த 15 சவரன் நகையையும் போலீஸார் மீட்டுள்ளனர்.

newstm.in

Next Story
Share it