Theme Check

கடந்த 24 மணி நேரத்தில் 17,336 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!!

கடந்த 24 மணி நேரத்தில் 17,336 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!!

கடந்த 24 மணி நேரத்தில் 17,336 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!!
X

இந்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 17,336 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இதன் மூலம் இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,33,62,474 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 13 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,24,954 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து 13,029 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன்மூலம் இதுவரை 4,27,49,056 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 88,284 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று ஒரே நாளில் 4,01,649 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதாகவும், இதுவரை மொத்தம் 85,98,95,036 கொரோனா மாதிரிகள் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாகவும் என ஒன்றிய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதுவரை 196.77 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக ஒன்றிய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Next Story
Share it