Theme Check

திமுக எம்பி கனிமொழி உட்பட 19 எம்பிக்கள் என சஸ்பெண்ட்

திமுக எம்பி கனிமொழி உட்பட 19 எம்பிக்கள் என சஸ்பெண்ட்

திமுக எம்பி கனிமொழி உட்பட 19 எம்பிக்கள் என சஸ்பெண்ட்
X

நடப்பு நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர், கடந்த 18ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. விலைவாசி உயர்வு, உணவு பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு போன்ற பிரச்சினைகளை எழுப்பி, முதல் நாளில் இருந்தே எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. நேற்றும் மக்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபையின் மையப்பகுதிக்கு வந்து அமளியில் ஈடுபட்டனர்.

விலைவாசி உயர்வுக்கு எதிரான பதாகைகளை கையில் பிடித்திருந்தனர். இதனால் மாணிக்கம் தாகூர், ஜோதிமணி உள்பட 4 காங்கிரஸ் எம்.பி.க்கள் நடப்பு கூட்டத்தொடரின் மீதி நாட்கள் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

parliment

இந்தநிலையில், மாநிலங்களவையில் விலைவாசி உயர்வு, உணவு பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு போன்ற பிரச்சினைகளை இன்றும் எதிர்க்கட்சிகள் எழுப்பினர். இதனையடுத்து சபையில் பதாகைகளை காண்பித்ததாகவும், துணைத் தலைவர் எச்சரிக்கையை மீறி சபை நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவித்ததாக மாநிலங்களவையில் இருந்து 5 திமுக எம்பிக்கள் உள்ளிட்ட 19 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

மாநிலங்களவையில் கனிமொழி, என்.வி.என். சோமு, சண்முகம், என்.ஆர்.இளங்கோ, அப்துல்லா, கிரிராஜன், சுஷ்மிதா தேவ், டோலாசென் உள்பட 11 பேர் மழைக்கால கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

parliment

தொடர் அமளியில் ஈடுபட்டு மாநிலங்களவை முடக்கியதால் 19 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.மாநிலங்களவை நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக விதி எண் 256ன் கீழ் மாநிலங்களவை துணைத் தலைவர் சஸ்பெண்ட் செய்தார். மாநிலங்களவையில் ஏற்கனவே 4 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் இன்று மேலும் 19 எம்பிக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

newstm.in

Next Story
Share it