Theme Check

சென்னை ஐஐடியில் மேலும் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!

சென்னை ஐஐடியில் மேலும் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!

சென்னை ஐஐடியில் மேலும் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!
X

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக கடந்த 21 ஆம் தேதி சென்னை கிண்டி ஐஐடி-யில் மாணவர்கள், பணியாளர்கள் உட்பட 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.அதன் எண்ணிக்கை நாள்தோறும் ஏறிக்கொண்டே வந்தது. ஏற்கெனவே 60 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில்,இன்று மேலும் 18 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 78-ஆக உயர்ந்துள்ளது.

தொற்று உறுதியானவர்களுக்கு லேசான அறிகுறிகள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 700க்கும் மேற்பட்டவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

Next Story
Share it