Theme Check

விஜயுடன் நடிக்க ஆசைப்படும் ‘18 வயது’ பிரபல இளம் நடிகை!!

விஜயுடன் நடிக்க ஆசைப்படும் ‘18 வயது’ பிரபல இளம் நடிகை!!

விஜயுடன் நடிக்க ஆசைப்படும் ‘18 வயது’ பிரபல இளம் நடிகை!!
X

தளபதி விஜய்யுடன் நடிக்க ஆசை என்று தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் கீர்த்தி ஷெட்டி விருப்பம் தெரிவித்துள்ளார்.

தெலுங்கு சினிமாவின் பிரபல ஹீரோயினான கீர்த்தி ஷெட்டி 2019இல் இந்தியில் வெளியான சூப்பர் 30 என்ற படத்தில் மாணவியாக நடித்து சினிமாவில் அறிமுகம் ஆனார்.

2021இல் விஜய் சேதுபதி முக்கிய கேரக்டரில் நடித்த உப்பென்னா படத்தில் கதாநாயகியாக இவர் நடித்திருந்தார். உப்பென்னா படம் மெகா ஹிட்டானதை தொடர்ந்து, அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆகியுள்ளார்.

keerthi

நானியுடன் ஷாம் சிங்கா ராய், நாக சைதன்யாவுடன் பங்கார ராஜு உள்ளிட்ட இவர் நடித்த படங்கள் ஹிட்டானது. தற்போது ராம் பொத்தேனி ஹீரோவாக நடிக்கும் தி வாரியர் படத்தில் நடித்துள்ளார்.

keerthi 2

இந்நிலையில் தளபதி விஜய்யுடன் நடிக்க ஆசையாக உள்ளதென கீர்த்தி விருப்பம் தெரிவித்துள்ளார். தமிழிலும் பல படங்களில் இவரை நடிக்க வைப்பதற்கு தயாரிப்பாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

newstm.in

Next Story
Share it