Theme Check

18 ஆண்டுகால மண வாழ்க்கை… விவாகரத்து பெற்றார் பிரபல இயக்குநர்!!

18 ஆண்டுகால மண வாழ்க்கை… விவாகரத்து பெற்றார் பிரபல இயக்குநர்!!

18 ஆண்டுகால மண வாழ்க்கை… விவாகரத்து பெற்றார் பிரபல இயக்குநர்!!
X

இயக்குனர் பாலா தனது மனைவியை சட்டப்பூர்வமாக விவாகரத்து செய்துள்ளார். கடந்த சில வருடங்களாக பிரச்னை இருந்த நிலையில் இருவரும் மனமொத்து பிரிந்துள்ளனர்.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் பாலா. அவர் இயக்கிய படங்கள் அனைத்தும் வித்தியாசமானவை. கதைக்களங்கள் வழக்கத்தைவிட மாறுபட்டு இருக்கும் என்பதால் அவருக்கு என்று தனி ரசிகர் பட்டாளம் உண்டு.

இந்திய அளவில் பாலாவுக்கு அங்கீகாரம் உண்டு. 'சேது', 'நந்தா', 'பிதாமகன்' என பல அற்புதமான திரைப்படங்களை இயக்கியுள்ளார். விக்ரம், சூர்யா, ஆர்யா, விஷால், அதர்வா உள்ளிட்ட நடிகர்களின் திறமையை வெளியே கொண்டு வந்தவர் பாலா.

Muthumalar-Bala

இந்நிலையில் பாலா தன் மனைவி முத்து மலரை சட்டபூர்வமாக விவாகரத்து செய்துள்ளார். சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் இருவரும் மனமொத்து விவாகரத்து பெற்றனர்.

கடந்த 4 வருடங்களாக மனதளவில் பிரிந்திருந்த நிலையில், இருவரும் சட்டப்பூர்வமாக சுமூகமான முறையில் பிரிந்தனர். இயக்குநர் பாலாவுக்கும் முத்துமலருக்கும் கடந்த 2004ஆம் ஆண்டு மதுரையில் திருமணம் நடைபெற்றது. 17 வருடங்கள் தம்பதிகளாக வாழ்ந்த இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளார்.

newstm.in

Next Story
Share it