சித்து உடலில் பாய்ந்த 19 குண்டுகள்.. பிரேத பரிசோதனையில் பகீர் தகவல் !!
சித்து உடலில் பாய்ந்த 19 குண்டுகள்.. பிரேத பரிசோதனையில் பகீர் தகவல் !!

பஞ்சாப் மாநிலத்தில் ஆளும் கட்சியாக இருந்த காங்கிரஸ் கடந்ததேர்தலில் ஆட்சியை இழந்தது. இந்த நிலையில், 29 வயதான பாடகர் சித்து மூஸ் வாலா கடந்த ஆண்டு டிசம்பரில் காங்கிரஸில் சேர்ந்தார். கடந்த பஞ்சாப் தேர்தலில் மான்சா மாவட்டத்தில் இருந்து காங்கிரஸ் சார்பில் போட்டியிட வாய்ப்பு வழங்கியப்போதும் இவர் தோல்வியடைந்தார்.
இந்த நிலையில் சித்து மூஸ் கடந்த மே 29ஆம் தேதி பட்டப்பகலில் துப்பாக்கியால் சுட்டுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் தனது ஜீப் வாகனத்தில் சென்றபோது, காரில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் 30க்கும் மேற்பட்ட ரவுண்டுகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இந்த கொலை சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனிடையே, சித்து மூஸ்வாலா கொலையில் தொடர்புடையே குற்றவாளிகள் மிகக் கடுமையான தண்டனை வழங்கப்படும் என்றும், ஆம்ஆத்மி ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் கூறியிருந்தார்.
இந்த நிலையில் சித்து மூஸ் வாலாவின் உடலில் 19 தோட்டாக்கள் பாய்ந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாகவும், சுடப்பட்ட 15 நிமிடங்களில் அவர் இறந்துவிட்டதாகவும் பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிய வந்துள்ளது. சித்து மூஸ் வாலா உடலின் வலது பக்கத்தில் அதிகமான குண்டு காயங்கள் இருந்ததாகவும், சிறுநீரகம், கல்லீரல், நுரையீரல் மற்றும் முதுகெலும்பில் தோட்டாக்கள் பாய்ந்துள்ளது என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சித்து மூஸ் வாலாவின் உடைகள் முற்றிலும் ரத்தத்தில் நனைந்து காணப்பட்டதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. சித்து மூஸ் வாலா கொலைக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் பொறுப்பேற்றுள்ளது. இதேபோல் கனடாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் கோல்டி ப்ரார் கும்பலும் இந்தக் கொலைக்கு பொறுப்பேற்றுள்ளது.
newstm.in

