Theme Check

1 வகுப்பு முதல் 20ம் தேதி பள்ளிகள் திறப்பு! கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு..!

1 வகுப்பு முதல் 20ம் தேதி பள்ளிகள் திறப்பு! கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு..!

1 வகுப்பு முதல் 20ம் தேதி பள்ளிகள் திறப்பு! கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு..!
X

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக விதிக்கப்பட்ட பொதுமுடக்கத்தால் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் உள்ளிட்டவை தற்காலிகமாக மூடப்பட்டன. இதன் காரணமாக மாணவர்கள் இணைய வழியில் தங்களது வகுப்புகளில் பங்கேற்று கல்வி கற்று வந்தனர்.

இந்நிலையில், கொரோனா இரண்டாம் அலை கட்டுக்குள் வந்ததையடுத்து பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ஹரியானாவில் கடந்த ஜூலை மாதம் 16ம் தேதி முதல், 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, ஜூலை 23ம் தேதியிலிருந்து 6 முதல் 8 ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும், செப்டம்பர் 1ம் தேதியிலிருந்து 4 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டன. தற்போது 1 முதல் 3ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வரும் 20ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பெற்றோரிடமிருந்து ஒப்புதல் கடிதம் பெற்றுவரும் மாணவர்கள் மட்டும் வகுப்பறைக்குள் அனுமதிக்கப்படுவர் எனவும், வகுப்புகளில் பங்கேற்க மாணவர்கள் கட்டாயப்படுத்தப்பட மாட்டார்கள் எனவும் அம்மாநில பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கன்வர் பால் குஜ்ஜார் தெரிவித்துள்ளார்.

Tags:
Next Story
Share it