விவசாய கிணற்றில் மிதந்த 2 உடல்கள்.. மீட்ட போலீசார் தீவிர விசாரணை..!

விவசாய கிணற்றில் மிதந்த 2 உடல்கள்.. மீட்ட போலீசார் தீவிர விசாரணை..!

விவசாய கிணற்றில் மிதந்த 2 உடல்கள்.. மீட்ட போலீசார் தீவிர விசாரணை..!
X

நாமக்கல் அருகே, விவசாய கிணற்றில் அழுகிய நிலையில் மிதந்த இரண்டு உடல்களை மீட்ட போலீசார் இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அடுத்த மல்லசமுத்திரம் பாலமேடு பதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம். இவருடைய விவசாய கிணற்றில் 40 வயது மதிக்கத்தக்க இரண்டு ஆண் உடல்கள் அழுகிய நிலையில் மிதப்பதாக அப்பகுதி பொதுமக்கள் மல்லசமுத்திரம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து அங்கு சென்ற காவல்துறையினர், தீயணைப்புத் துறையினர் உதவியுடன் அந்த இரண்டு உடல்களையும் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதைத் தொடர்ந்து, இறந்தவர்கள் யார்..?, அவர்கள் எந்த பகுதியைச் சேர்ந்தவர்கள்..? என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story
Share it