அக்னிபத் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்குவதாக 2 தொழிலதிபர்கள் உறுதி!!
அக்னிபத் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்குவதாக 2 தொழிலதிபர்கள் உறுதி!!

இந்திய பாதுகாப்புப் படையில் இளைஞர்களை சேர்க்க அக்னிபத் என்ற புதிய திட்டத்தை மத்திய அரசு கடந்த வாரம் அறிவித்தது. இந்திய ராணுவத்தில் இளைஞர்களின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் என்ற நோக்கில் இந்த திட்டத்தை உருவாக்கியுள்ளதாக மத்திய அரசு கூறும் நிலையில், இந்த வேலைத் திட்டத்தின் அம்சங்களுக்கு எதிராக நாடு முழுவதும் பெரும் போராட்டம் வெடித்துள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் 17.5 முதல் 21 வயதினர் பணிக்கு எடுக்கப்பட்டு, அவர்கள் நான்கு ஆண்டுகள் பணிபுரிய வாய்ப்பு வழங்கப்படும். 4 ஆண்டுகளுக்குப் பின்னர் அவர்களில், 25 சதவீதத்தினர் மட்டுமே ராணுவப் பணியில் தொடர்வார்கள். மீதமுள்ளவர்களுக்கு ரூ.11-13 லட்சம் தொகையுடன் பணி ஓய்வு வழங்கப்படும்.

பெரும்பாலான இளைஞர்கள் நான்கு ஆண்டு மட்டுமே பணிபுரிந்து ஓய்வு பெற்றால் அவர்களின் எதிர்காலம் என்னவாகும், ராணுவ பணியில் இத்தகைய மாற்றங்கள் ஏற்கத்தக்கதல்ல எனக் கூறி நாடு முழுவதும் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் போராட்டம் குறித்து கவலை தெரிவித்துள்ள நாட்டின் முன்னணி தொழிலதிபர்களான ஆனந்த் மகேந்திரா மற்றும் ஹர்ஷ் கோயங்கா, அக்னிபத் திட்டத்தில் பணிபுரிந்து ஓய்வு பெறும் இளைஞர்களுக்கு தங்கள் நிறுவனத்தில் பணிபுரிய வாய்ப்பும் முன்னுரிமையும் வழங்கப்படும் என்றுள்ளனர்.
The RPG group too welcomes the opportunity to employ the Agniveers. I do hope other corporates will also join us to take this pledge and assure our youths of a future. https://t.co/PE7Hc1y1W9
— Harsh Goenka (@hvgoenka) June 20, 2022
ஆனந்த் மகேந்திராவின் ட்வீட்டை தொடர்ந்து, ஆர்பிஜி நிறுவனத்தின் தலைவரான ஹர்ஷ் கோயங்காவும், 'ஆர்பிஜி குழுமத்தில் அக்னி வீரர்கள் பணிபுரிய நல்ல வாய்ப்பு வழங்கப்படும். மற்ற கார்பரேட் நிறுவனங்களும் இது போன்று இளைஞர்களுக்கு நல்ல எதிர்காலத்தை வழங்க முன்வரும் என நம்புகிறேன்' என்று பதிவிட்டுள்ளார்.
newstm.in

