Theme Check

2 கவுன்சிலர்கள் சுட்டுக் கொலை.. பதறவைக்கும் வீடியோ !!

2 கவுன்சிலர்கள் சுட்டுக் கொலை.. பதறவைக்கும் வீடியோ !!

2 கவுன்சிலர்கள் சுட்டுக் கொலை.. பதறவைக்கும் வீடியோ !!
X

ஒரே நாளில் இருவேறு இடங்களில் இரண்டு வார்டு கவுன்சிலர்கள் சுட்டுக் கொல்லப் பட்ட சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு அரசியல் வன்முறை சம்பவங்கள் அதிகம் நடக்கும் என்றாலும், மக்கள் முன்னிலையில் இரண்டு கவுன்சிலர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

அங்குள்ள ஜல்தா நகராட்சியைச் சேர்ந்த காங்கிரஸ் கவுன்சிலர் தபன் காண்டு, துப்பாக்கி தோட்டா பாய்ந்ததில் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார். கவுன்சிலர் கொலையை கண்டித்து புருலியா மாவட்டத்தில் நாளை 24 மணி நேர பந்த் நடத்த காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது.

murder

இதேபோல்,பானிஹாட்டி நகராட்சியின் 8ஆவது வார்டு திரிணாமுல் காங்கிரஸ் கவுன்சிலர் அனுபம் தத்தா, பைக்கில் வந்த 4 மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

ஞாயிற்றுக்கிழமை மாலை வீடு திரும்பிய அவர், தலையில் துப்பாக்கியால் சுடப்பட்டார். முதலில் கமர்ஹாட்டியில் உள்ள மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டார், பின்னர் பெல்காரியாவில் உள்ள தனியார் மருத்துவ மனைக்கு அவர் மாற்றப்பட்டார். அங்கு அவர் இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது.

ஒரே நாளில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளை சேர்ந்த கவுன்சிலர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் மேற்கு வங்கத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இரு கட்சியினரும் போராட்டம் நடத்தி வருவதால் மேற்குவங்கத்தில் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.


newstm.in

Next Story
Share it