பள்ளி, கல்லூரிகளுக்கு 2 நாள் விடுமுறை.. தேர்வுகள் ஒத்திவைப்பு..!
பள்ளி, கல்லூரிகளுக்கு 2 நாள் விடுமுறை.. தேர்வுகள் ஒத்திவைப்பு..!

மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நாடு முழுவதும் 2 நாள் முழு வேலை நிறுத்த போராட்டம் தொடங்கியது.
அதன்படி, கேரளாவில் நேற்று நள்ளிரவு 12 மணிக்கு வேலை நிறுத்த போராட்டம் தொடங்கியது. இன்று அதிகாலை முதல் அரசு பஸ்கள் எதுவும் ஓடவில்லை.
இதனால் திருவனந்தபுரம், எர்ணாகுளம், கோழிக்கோடு, மலப்புரம், திருச்சூர் உள்ளிட்ட அனைத்து நகரங்களிலும் போக்குவரத்து முழுமையாக முடங்கியது.
இதுபோல், மாநிலம் முழுவதும் பெரும்பாலான வர்த்தக நிறுவனங்கள் மூடிக்கிடந்தன. பஸ், கார்கள் ஓடவில்லை என்றாலும் ரயில்கள் வழக்கம் போல ஓடியது.
விமான சேவையும் நடந்தது. இதனால் வெளியூர்களில் இருந்து கேரளா வந்த பயணிகள் அங்கிருந்து வீடுகளுக்குச் செல்ல முடியாமல் தவித்தனர்.
முழு அடைப்பு போராட்டத்தையொட்டி கேரளாவில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்றும், நாளையும் விடுமுறை விடப்பட்டுள்ளது. மேலும், இந்த நாட்களில் நடக்க இருந்த தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
வங்கிகளிலும் குறைந்த அளவே பணியாளர்கள் வந்திருந்தனர். இதனால் அங்கும் பணிகள் பாதிக்கப்பட்டது.

