2 நாட்கள் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு- வானிலை மையம் எச்சரிக்கை !
2 நாட்கள் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு- வானிலை மையம் எச்சரிக்கை !

தென் கிழக்கு அரபிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வருகிறது. இதனால் மக்கள் அவதியடைந்து வரும் நிலையில், அடுத்த இரண்டு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், இன்றும், நாளையும் தமிழகம், புதுச்சேரியில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 26 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது.

சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. இதனிடையே, கடந்த 24 மணிநேரத்தில் கொடைக்கானலில் 8 செ.மீ., ராஜபாளையம், பிளவக்கல் பகுதிகளில் தலா 6 செ.மீ. மழை பதிவாகியுள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று மாலை சூறைக்காற்றுடன் அரைமணி நேரம் பெய்த கனமழையால் வெப்பம் தணிந்து இதமான சூழல் காணப்பட்டது.
newstm.in

