புதுச்சேரியில் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை..!!
புதுச்சேரியில் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை..!!

வங்க கடலில் தெற்கு அந்தமான் கடற்பகுதியில் நாளை திங்கள்கிழமை புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது ஒரு நாள் தாமதமாக நாளை மறுநாள் (நவ. 30) உருவாகிறது.
இதனையடுத்து தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் இன்று ஞாயிற்றுக்கிழமை மிக கனமழை வாய்ப்புள்ளதாகவும், அதன்படி, தஞ்சை, நாகை, திருவாரூர், கடலூர், மயிலாடுதுறை, ராமநாதபுரம், தூத்துக்குடி, புதுக்கோட்டை மற்றும் அரியலூர் ஆகிய 9 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதேபோன்று புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில், புதுச்சேரி கல்வி அமைச்சர் நமச்சிவாயம் இன்று கூறும்போது, தொடர்மழையை முன்னிட்டு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு இருக்கிறது.
இதனை முன்னிட்டு புதுச்சேரியில் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை அளிக்கப்படுகிறது என அறிவித்து உள்ளார்.

