2 டோஸ் தடுப்பூசி போட்டும், பிரபல நடிகை 2வது முறையாக கொரோனா..!

2 டோஸ் தடுப்பூசி போட்டும், பிரபல நடிகை 2வது முறையாக கொரோனா..!

2 டோஸ் தடுப்பூசி போட்டும், பிரபல நடிகை 2வது முறையாக கொரோனா..!
X

விரட்டு தமிழ் படம் மூலம் நடிகையானவர் பிரக்யா ஜெய்ஸ்வால். அவர் தற்போது தெலுங்கு, இந்தி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

தமிழில் ‘விரட்டு’ படம் மூலம் நடிகையானவர் பிரக்யா ஜெய்ஸ்வால். அவர் தற்போது தெலுங்கு, இந்தி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இப்போது பாலகிருஷ்ணா ஜோடியாக ‘அகண்டா’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது. சிகிச்சைக்குப் பின் அதில் இருந்து மீண்டார். இந்நிலையில் அவருக்கு இரண்டாவது முறையாக இப்போது கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுபற்றி இன்ஸ்டாகிராமில் அவர் தெரிவித்துள்ளார்.

அதில், “எனக்கு மீண்டும் கொரோனா தொற்று பாதித்துள்ளது. தடுப்பூசி செலுத்திய பிறகும் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறேன். ஏற்கனவே ஒரு முறை எனக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டிருந்தும் இப்போது மீண்டும் பாசிட்டிவ் என வந்திருக்கிறது. டாக்டர்களின் அறிவுரைப்படி, கொரோனா விதிமுறைகளை பின்பற்றி தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.


Tags:
Next Story
Share it