2 டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டால் உயிருக்கு கியாரண்டி.. நிதி ஆயோக் !!
2 டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டால் உயிருக்கு கியாரண்டி.. நிதி ஆயோக் !!

கொரோனா தடுப்பூசி 2 டோஸ் போட்டுக்கொண்டால் தொற்றால் உயிருக்கு ஆபத்தில்லை என்பது ஆராய்ச்சிகள் மூடிவுகள் வெளியாகியுள்ளது.
நாடு முழுவதும் தற்போது தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. முன்பைவிட தற்போது மக்கள் ஆர்வமுடன் முன்வந்து தடுப்பூசி செலுத்திக்கொள்கின்றனர். அதேபோல் மத்திய அரசும் வெளிநாட்டு தடுப்பூசிகளுக்கு அனுமதி அளிக்கும் முடிவில் நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்த நிலையில், சமீபத்தில் சண்டிகரில் உள்ள முதுநிலை மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், பஞ்சாப் அரசுடன் இணைந்து கொரோனா தடுப்பூசியின் செயல்திறன் குறித்து ஆய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வு முடிவுகளை சுட்டிக்காட்டி தற்போது வெளியிடப்பட்டுள்ளன. அதில், தடுப்பூசியின் 2 டோஸ்களையும் போட்டுக்கொண்டால் 98 சதவீதம் உயிருக்கு பாதுகாப்பு என்று நிதி ஆயோக் உறுப்பினர் (சுகாதாரம்) வி.கே.பால் தெரிவித்தார்.

முன்களப் பணியாளர்களான போலீசாரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. தடுப்பூசியே செலுத்திக்கொள்ளாத 4 ஆயிரத்து 868 போலீசாரில் 15 பேர் கொரோனா தொற்றில் இறந்ததும், தடுப்பூசியின் ஒரு டோஸ் போட்டுக்கொண்ட 35 ஆயிரத்து 856 பேரில் 9 பேர் இறந்ததும் தெரியவந்தது. ஆனால் 2 டோஸ்களும் போட்டுக்கொண்ட 42 ஆயிரத்து 720 பேரை ஆய்வுக்கு உட்படுத்தியதில் 2 பேர் மட்டுமே பலியானது ஆய்வில் தெரியவந்தது.
இதை சுட்டிக்காட்டி பேசிய வி.கே.பால், போலீசார் அதிக ஆபத்தான சூழலில் பணியாற்றுவதால் அவர்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வின்படி, ஒரு டோஸ் தடுப்பூசி 92 சதவீதம் பாதுகாப்பானது என்றும், 2 டோஸ்கள் 98 சதவீதம் பாதுகாப்பானது என்றும் தெரியவந்துள்ளது என்றும் அவர் கூறினார்.
newstm.in

