Theme Check

திருமண நிகழ்ச்சியில் சாப்பிட்ட 2 சிறுமிகள் பலி.. பலருக்கும் தீவிர சிகிச்சை !!

திருமண நிகழ்ச்சியில் சாப்பிட்ட 2 சிறுமிகள் பலி.. பலருக்கும் தீவிர சிகிச்சை !!

திருமண நிகழ்ச்சியில் சாப்பிட்ட 2 சிறுமிகள் பலி.. பலருக்கும் தீவிர சிகிச்சை !!
X

திருமண நிகழ்ச்சியில் உணவு சாப்பிட்ட 2 சிறுமிகள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியப் பிரதேசத்தின் சிந்த்வாரா மாவட்டத்தில் கோடியா கிராமத்தில் திருமண நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றுள்ளது. இதில் மணமகன், மணமகள் வீட்டார், நண்பர்கள் என ஏராளமாளோர் கலந்துகொண்டனர்.

இந்த திருமண விழாவில் உணவு சாப்பிட்டதைத் தொடர்ந்து, பலருக்கும் வாந்தி மற்றும் பேதி ஏற்பட்டுள்ளது. உடனே அவர்கள் பாண்டுர்னா சிவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி 2 சிறுமிகள் உயிரிழந்தனர் என்று மருத்துவர் தெரிவித்தார். பாலக் (8), அக்ஷரா (11) ஆகிய இரண்டு சிறுமிகள் உயிரிழந்தனர்.

sdf

மேலும் உணவு சாப்பிட்டு பாதிக்கப்பட்ட 15 பேரில் இருவரின் நிலை மோசமாக உள்ளது. அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு சிறுமிகளின் சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பறிமாறப்பட்ட உணவு வகைகள், குறித்து ஆய்வு செய்யப்படுகிறது. குறிப்பாக உணவில் விஷம் கலந்துள்ளதா என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

newstm.in

Tags:
Next Story
Share it