Theme Check

2 1/2 கிலோ நகைகள் கொள்ளை! குல்லா மனிதன் கைவரிசை! சிசிடிவி வெளியீடு!

உரிமையாளர் வீட்டில் புகுந்து சாவியை எடுத்து நகைக்கடையில் 2 கிலோ தங்கம் கொள்ளை..!

2 1/2 கிலோ நகைகள் கொள்ளை! குல்லா மனிதன் கைவரிசை!  சிசிடிவி வெளியீடு!
X

கன்னியாகுமரி அருகே உரிமையாளர் வீட்டுக்குள் புகுந்து, பூஜை அறையில் இருந்த சாவியை திருடி வந்து நகை கடையை திறந்து சுமார் 2 கிலோ தங்க நகைகளை கொள்ளையர்கள் திருடி சென்றுள்ளனர். மார்த்தாண்டம் விரிகோடு பகுதியை சேர்ந்த பொன் விஜய் (40) அங்குள்ள பஸ் நிலையம் எதிரில் நகை கடை நடத்தி வருகிறார். இரவு நகை கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்ற, பொன் விஜய் கடை சாவியை பூஜை அறையில் வைத்து விட்டு உறங்க சென்றார்.

2 1/2 கிலோ நகைகள் கொள்ளை! குல்லா மனிதன் கைவரிசை!  சிசிடிவி வெளியீடு!

சாவியுடன் 56 பவுன் தங்க நகைகளும், 1 லட்சம் ரொக்கமும் இருந்துள்ளது. காலையில் பூஜை அறையில் இருந்த 56 பவுன் நகைகள், 1 லட்சம் கொள்ளை போனதோடு, நகை கடை சாவியும் மாயமாகி இருந்தது. உடனடியாக நகை கடைக்கு சென்று பார்த்துள்ளனர். கடை ஷட்டர் பூட்டு திறந்து கிடந்தது. உள்ளே இருந்த நகைகள் அனைத்தும் கொள்ளை போயிருந்ததை கண்டு அதிர்ந்தனர்.

2 1/2 கிலோ நகைகள் கொள்ளை! குல்லா மனிதன் கைவரிசை!  சிசிடிவி வெளியீடு!

புகாரின்படி காவல்துறையினர் விசாரணை நடத்தியதில், மாடி கதவை திறந்து வீட்டிற்குள் புகுந்து கொள்ளையடித்ததுடன் சாவியையும் எடுத்துச் சென்றது தெரியவந்தது. கடையில் உள்ள சிசிடிவி கேமராவை போலீசார் ஆய்வு செய்த போது, அதில், அதிகாலை 3 மணியளவில் மர்ம நபர் ஒருவர் முகத்தை மறைக்கும் வகையிலான குல்லாவை அணிந்துக் கொண்டு திருடிச் செல்வது தெரிய வந்தது.

2 1/2 கிலோ நகைகள் கொள்ளை! குல்லா மனிதன் கைவரிசை!  சிசிடிவி வெளியீடு!

அந்த நபர் யார் என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதனிடையே அப்பகுதியில் இருந்த மேலும் பல சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது கொள்ளையன் கேரளாவிற்கு தப்பிச் சென்றிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகித்து, கேரள காவல்துறையினரின் உதவியை நாடியுள்ளனர்.

newstm.in

Tags:
Next Story
Share it