Theme Check

நின்று கொண்டிருந்த டிராக்டர் மீது பைக் மோதி 2 பேர் உயிரிழப்பு!!

நின்று கொண்டிருந்த டிராக்டர் மீது பைக் மோதி 2 பேர் உயிரிழப்பு!!

நின்று கொண்டிருந்த டிராக்டர் மீது பைக் மோதி 2 பேர் உயிரிழப்பு!!
X

சேலம் மாவட்டத்தில் பழுதாகி நின்று கொண்டிருந்த டிராக்டரின் பின்னால் பைக் மோதியதில் தந்தை, மகன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொளத்தூர் அருகே மூலகாட்டைச் சேர்ந்த கூலி தொழிலாளி அன்பு(40) என்பவர் கிரைண்டர்களுக்கு கல் அறுக்கும் வேலை செய்துவந்தார். அவரது மகன் கார்த்திக் (12) 6ஆம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில் அன்பு தனது பக்கத்து வீட்டை சேர்ந்த தச்சுத் தொழிலாளி கோவிந்தராஜ் (40) என்பவருடன் பைக்கில் கொளத்தூருக்கு சென்றார். அப்போது கார்த்தியை பைக்கில் முன்னாள் அமர வைத்திருந்தனர்.

Death

கொளத்தூரில் பணிகளை முடித்துவிட்டு மூல காட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்த போது, பாலிக்காடு என்ற இடத்தில் பஞ்சராகி நின்றிருந்த டிராக்டரின் பின்னால் பைக் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அன்பும் அவரது மகன் கார்த்திக்கும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

உடன்வந்த தச்சு தொழிலாளி கோவிந்தராஜ் (40), பலத்த காயங்களுடன் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். விபத்துக்குறித்து கொளத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

newstm.in

Next Story
Share it