அடுத்தவாரம் 2 அமைச்சர்கள் நிச்சயம் பதவி விலகுவார்கள்.. அடித்துசொல்லும் அண்ணாமலை !!
அடுத்தவாரம் 2 அமைச்சர்கள் நிச்சயம் பதவி விலகுவார்கள்.. அடித்துசொல்லும் அண்ணாமலை !!

சென்னையில் நேற்றுமுன்தினம் நடந்த அரசு விழாவில் தமிழக முதலமைச்சர் உரை வைரலாகி வருகிறது. பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் அவரது உரைக்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர். ஆனால், பாஜக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. முதலமைச்சர் பேசியது குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சென்னை பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் இவ்வளவு பெரிய வரவேற்பு கிடைத்ததை பார்த்து, தான் மகிழ்ச்சி அடைந்ததாக பிரதமர் மோடி கட்சி நிர்வாகிகளிடம் தெரிவித்தார். அதேநேரம் முதலமைச்சர் மேடையில் பேசியது, அவர்கள் கட்சி மேடை பேச்சாக இருந்தது.
தமிழகத்தில் இரண்டு துறை அமைச்சர்கள் சம்பந்தப்பட்ட சுமார் 100 கோடி மற்றும் 120 கோடி ரூபாய் அளவிலான ஊழல் குறித்து சில ஆதாரங்களை விரைவில் வெளியிட உள்ளோம். அதை வெளியிட்டால் இரண்டு அமைச்சர்கள் பதவி விலக வேண்டிவரும். இதேபோன்று அடுத்தடுத்து ஊழல்கள் குறித்து புத்தகம் வெளியிடுவோம்.

பிரதமரிடம் முதல்வர் கோரிக்கை வைப்பதில் தவறில்லை. ஆனால் அந்த கோரிக்கைகளில் லாஜிக்-ஏ இல்லை! என் மீது வாரம் வாரம் நோட்டீஸ் அனுப்புகிறார்கள். ஆனால் ஏன் ஆர்எஸ் பாரதி-யும், வில்சனும் நீட் தேர்வு விலக்குக்காக உச்சநீதிமன்றத்தில் மனு போட்டு வழக்கை தொடுக்கக் கூடாது? தமிழ்நாட்டில் தமிழை அடிப்படை கல்வியாக வைத்து, கல்வியை கொண்டுவர முடியாமல் இருக்கிறார்கள். ஏன் இதை அவர்களால் செய்ய முடியவில்லை?” என அடுக்கடுக்காக பல கேள்விகளை அண்ணாமலை முன்வைத்தார்.
கச்சத்தீவை இவர்களால் மீட்டெடுக்க முடியாது! பின் அதை வைத்து ஏன் நாடகம் ஆடுகிறார்கள்? என்ன அவசியம் உள்ளது? இந்த அரசு `கச்சத்தீவை நாங்கள்தான் தாரைவார்த்தோம்’ என்று தமிழக மக்களிடம் மன்னிப்பு கேளுங்கள் என்றே சொல்ல வேண்டும். ஏனெனில் கச்சத்தீவு எப்படி இருக்கும் என்று எங்களுக்கு தெரியும். எங்களுக்கு கச்சத்தீவைஎப்படி மீட்க வேண்டும் என்றும் தெரியும். ஆர்ட்டிக்கிள் 6 திருப்பி கொண்டு வரப்பட வேண்டும்.
தொடர்ந்து நேற்றைய நிகழ்வில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு நிதின் கட்கரி எழுந்து நிற்காததற்கு விளக்கமளித்த அவர், தொழில்நுட்பக் கோளாறு, சில லிங்க் பிரச்சனை காரணமாகவே நிதின் கட்கரி தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்காமல் இருந்திருக்க வேண்டும். அதை தவிர வேறொன்றும் இருக்காது, என்றார்.

