Theme Check

நாசிக் வானொலிக்கு 2 தேசிய விருது..! - எதற்காக தெரியுமா..?

நாசிக் வானொலிக்கு 2 தேசிய விருது..! - எதற்காக தெரியுமா..?

நாசிக் வானொலிக்கு 2 தேசிய விருது..! - எதற்காக தெரியுமா..?
X

மகாராஷ்டிராவின் நாசிக் நகரில் உள்ள விஷ்வாஸ் தியான் பிரபோதினி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தால் நடத்தப்படும் ‘ரேடியோ விஷ்வாஸ் 90.8’. இது, நாள்தோறும் 14 மணி நேரம் நிகழ்ச்சிகளை ஒலிபரப்புகிறது.



கோவிட் பெருந்தொற்று காலத்தில் ஸ்மார்ட் போன் இல்லாத மாணவர்களின் கல்வி பாதிக்கக் கூடாது என்பதற்காக, கடந்த ஆண்டு ஜூன் மாதம் பெருநிறுவன சமூக பொறுப்பு திட்டத்தின் கீழ், 'அனைவருக்கும் கல்வி' என்ற நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. இதில், மூன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இலவசக் கல்வி வழங்கப்பட்டது.

ஜில்லா பரிஷத் மற்றும் நாசிக் நகராட்சி பள்ளிகளில் படிக்கும் அனைத்து மாணவர்களையும் சென்றடையும் விதத்தில் ஹிந்தி, ஆங்கிலம், மராத்தி மற்றும் சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் பாடங்கள் ஒலிபரப்பப்பட்டன.


இந்த நிகழ்ச்சிக்காக, ரேடியோ விஷ்வாசுக்கு, தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தால் நிறுவப்பட்ட, தேசிய சமுதாய வானொலி விருதுகளின் எட்டாவது பதிப்பில் இரண்டு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து நிலைய இயக்குநர் டாக்டர் ஹரி விநாயக் குல்கர்னி கூறுகையில், “ஸ்மார்ட் போன் வாங்க முடியாத ஏழ்மை நிலையில் உள்ள மாணவர்களுக்கு இந்நிகழ்ச்சி உதவிகரமாக இருந்தது. எங்கள் நிலையத்திற்கு வருகை தந்து பாடங்களை பதிவு செய்த 150 ஆசிரியர்களின் உதவியுடன் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டது. பாட வாரியாக நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்பட்ட நிலையில், அனைவருக்கும் கல்வி நிகழ்ச்சிக்கு பெரும் வரவேற்பு கிடைத்து. இதன் மூலம், 60,000 மாணவர்கள் பயனடைந்தனர்” என்றார்.

Tags:
Next Story
Share it