Theme Check

+2 தேர்வில் அதிர்ச்சி!! சேலத்தில் மட்டும் 1,761 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதவில்லை!!

நேற்று +2 வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு துவங்கிய நிலையில், மொழி பாட கேள்விகள் எளிதாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில், நேற்று சேலம் மாவட்டத்தில் 1,761 மாணவர்கள் முதல் தேர்வான தமிழ் தேர்வு எழுத வரவில்லை. சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை, நேற்று நடந்த தமிழ் தேர்விற்கு 820 மாணவர்கள், 941 மாணவிகள் என மொத்தம் 1,761 பேர் தேர்வு எழுதவில்லை.

+2 தேர்வில் அதிர்ச்சி!! சேலத்தில் மட்டும் 1,761 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதவில்லை!!
X

தமிழகம் மற்றும் புதுவையில் நேற்று +2 வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு துவங்கிய நிலையில், மொழி பாட கேள்விகள் எளிதாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில், நேற்று சேலம் மாவட்டத்தில் 1,761 மாணவர்கள் முதல் தேர்வான தமிழ் தேர்வு எழுத வரவில்லை. சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை, நேற்று நடந்த தமிழ் தேர்விற்கு 820 மாணவர்கள், 941 மாணவிகள் என மொத்தம் 1,761 பேர் தேர்வு எழுதவில்லை.

கல்லூரி மேற்படிப்பையும், மாணவர்களின் எதிர்காலத்தையும் தீர்மானிக்கும் முக்கிய தேர்வான +2 தேர்வை ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகளும் எழுதாதது பெற்றோர், ஆசிரியர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தீவிர விசாரணை செய்து, இந்த போக்கைக் களைய பள்ளிக் கல்வித்துறை முயற்சி செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

+2 தேர்வில் அதிர்ச்சி!! சேலத்தில் மட்டும் 1,761 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதவில்லை!!

மேலும், நேற்று நடைப்பெற்ற பொதுத் தேர்வில் ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்ட காரணத்தினால் 11 மாணவர்களுக்கு அடுத்த 5 ஆண்டுகளுக்கு பொதுத்தேர்வு எழுத தேர்வுத்துறை தடை விதித்துள்ளது.

மாணவர்களின் தேர்வை கண்காணிக்க ஆசிரியர்கள் மற்றும் பறக்கும் படை அதிகாரிகள் நியமிக்கப்படிருந்தனர். மேலும் தேர்வுகளின் போது, காப்பியடித்தல் மற்றும் வேறு ஏதேனும் ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டால் அவர்கள் 5 ஆண்டுகள் தேர்வு எழுத தடை செய்யப்படுவார்கள் என முன்னதாக தேர்வுத்துறை அறிவித்திருந்தது.

+2 தேர்வில் அதிர்ச்சி!! சேலத்தில் மட்டும் 1,761 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதவில்லை!!

இந்நிலையில் நேற்று நடைபெற்ற தமிழ் முதல்தாள் தேர்வில் காப்பி அடித்தல் உட்பட ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்ட மாணவர்களின் பட்டியலை தேர்வுத்துறை வெளியிட்டது. 5 ஆண்டுகளுக்கு தேர்வு எழுத தடை விதிக்கப்பட்ட அனைவருமே பழைய பாடத்திட்டத்தின் கீழ் சென்னை மற்றும் வேலூரில் தேர்வு எழுதிய தனித்தேர்வர்கள்.

newstm.in

Tags:
Next Story
Share it