பாஜகவில் ஐக்கியமாகப் போகும் 2 சிட்டிங் எம்பிக்கள் !
பாஜகவில் ஐக்கியமாகப் போகும் 2 சிட்டிங் எம்பிக்கள் !

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக சினிமா பிரபலங்கள், மாற்றுக் கட்சி நிர்வாகிகள், அரசு உயர் அதிகாரிகள் என பலரும் பாஜகவில் இணைந்த வண்ணம் உள்ளனர். அந்த வகையில், தமிழகத்தில் உள்ள காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் பாஜகவில் இணைத்து வருகின்றனர்.
சென்னையில் பாஜக தலைமை அலுவலகத்திற்கு அண்மையில், தமிழக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி வருகை தந்தார். அப்போது, தமிழக பாஜக தலைவர் முருகன், தமிழக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி ஆகியோர் முன்னிலையில், தெலுங்கு கூட்டமைப்பின் தலைவர் டாக்டர் ரெட்டி, ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி பிச்சம்மாள், காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ. காயத்ரி தேவி, கிங் மேக்கர் ஐ.ஏ.எஸ். அகாடமி பூமிநாதன், காங்கிரஸ் மாநில செயலாளர் சீனிவாசன், தமிழக கம்மவார் பேரவை செல்வராஜ், நடிகர் அம்சவர்தன் ஆகியோர் பாஜகவில் இணைத்தனர்.

இதில், காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ. காயத்ரி தேவிக்கு முக்கிய அசைண்மெண்ட் வழங்கப்பட்டுள்ளதாம். அதில், அவர் வெற்றி பெற்று விட்டாராம். இதில், காங்கிரஸ் மற்றும் முக்கிய ஒரு கட்சியைச் சேர்ந்த 2 எம்பிக்கள் பாஜகவில் ஐக்கியமாக விருப்பம் தெரிவித்துவிட்டார்களாம். மேலும், தேர்தலுக்கு முன்னர் காஹ்கிரஸ் கூடாரத்தில் இருந்து ஏராளமான நிர்வாகிகள் பாஜகவில் இணைய உள்ளார்களாம்.
இதற்கான பிள்ளையார் சுழி போட்டப்பட்டு, முதற்கட்ட பேச்சுவார்த்தையும் சுபமாக நடந்து முடிந்துவிட்டதாம். விரைவில் அறிவிப்பு வெளியாகும் என கண்சிமிட்டுகின்றனர் பாஜக மூத்த தலைவர்கள்.

