Theme Check

தந்தை உயிரிழந்த போதும் தேர்வெழுதிய +2 மாணவன்!!

தந்தை உயிரிழந்த போதும் தேர்வெழுதிய +2 மாணவன்!!

தந்தை உயிரிழந்த போதும் தேர்வெழுதிய +2 மாணவன்!!
X

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ரயில்வே காலனியை சேர்ந்த முத்து (48) இருசக்கர வாகன பழுது நீக்க கடை நடத்தி வந்தார். இதனிடையே அவர் சில மாதங்களுக்கு முன் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீட்டில் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று நெஞ்சு வலி ஏற்பட்டு அவர் மரணமடைந்தார். அவருடைய மகனான சந்தோஷ் மானாமதுரை பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள .வெ. செ. பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார்.

svg student

தற்போது பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு நடைபெற்று வருவதால் பரீட்சைக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில் தந்தை மரணம் அடைந்ததை ஒட்டி தந்தைக்கு செய்ய வேண்டிய காரியங்களை செய்துவிட்டு நேற்று இயற்பியல் தேர்வு எழுத சந்தோஷ் சென்றார்.

ஒரு பக்கம் தந்தைக்கு உடல் அருகே இருக்க முடியமாலும் பள்ளி பொது தேர்வையும் எழுத வேண்டும் இரண்டுமே ஒரே நேரத்தில் செய்வதறியமால் கடமையாற்ற சென்ற சந்தோசை உறவினர்கள் ஊக்கப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

newstm.in

Next Story
Share it